அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இயேசுவும் பொந்தியு பிலாத்துவும்

 
இயேசுவை யூத சமயத் தலைவர்கள் கொல்லத் திட்டமிட்டிருந்த விவரத்தை சுவிசேகர் மத்தேயு இவ்வாறு எழுதியுள்ளார்: “....... சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணி (27:1)

ஆனால் தனது அடியாராகிய இயேசுவை சிலுவை மரணத்திலிருந்தும், கொடியவர்களின் கையிலிருந்தும் காப்பாற்றும் திட்டத்தினை திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

‘(ஈஸாவின் பகைவர்களாகிய) அவர்களும் திட்டம் தீட்டினர். அல்லாஹ்வும்

இக்திதார்

 
அல்லாஹ்வுடைய வல்லமைமிக்க அடையாளம் என்பதன் பொருள், அவனுடைய பொதுவான விதிகளுக்கும், சட்டத்திற்கும், மாறுபட்ட நிகழ்ச்சியாகும். இதற்க்கு இக்திதார் என்று பெயர். ‘இக்திதார்’ மூலமாக நிகழும் அடையாளம், விரோதிகளை அழிப்பதற்கு மட்டுமின்றி, இறைநேசர்களுக்கும், அவனுடைய நல்லடியார்களுக்கும் உதவிபுரிவதற்க்காகவும் காட்டப்படுகிறது. சில சமயம் ஒரே வேளையில் இரு வகையான அடையாளங்களை ஒன்றாக சேர்த்துக் காட்டுகின்றான்.

ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ‘நான் ஸியால் கோட்டில் இருக்கும் போது ஒரு நாள் கடுமையான இடியும் மின்னலும்

காலத்தால் மாறாதது இஸ்லாம்!


முஸ்லிம் சட்டத்தை மாற்றவேண்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய மதத்தைக் கடைபிடிக்க அதன் படி வழிபாடுகள் நிகழ்த்த, அதனை பிரச்சாரம் செய்ய இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது.

இதற்க்கு மாற்றமாக ஒருவன் தன் மதம் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாது, பொதுவானதையே கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனம் அளித்துள்ள தனி மனித உரிமைகளை

லா நபிய்ய பஹ்தி ஹதீஸிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்

 
லா நபிய்ய பஹ்தி என்ற ஹதீஸிற்கு இனி இறுதிநாள் வரை எந்த ஒரு நபியும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள்(?) கொடுக்கும் விளக்கமாகும். ஆனால் இவர்களின் இந்த கூற்றுகளை கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

ஷைஹுல் இமாம் இப்னு கத்தீபா (ஹிஜ்ரி 267)

ஹஸ்ரத் ஆயிஸா (ரலி) அவர்களின் கூற்று ‘லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழிக்கு முரண்பட்டதல்ல; ஏனென்றால் தமக்குப் பிறகு தாம் கொண்டு வந்த ஷரியத்தை இரத்து செய்யக் கூடிய ஒரு நபியும் தோன்றமாட்டார்கள்.

யூதர்களின் கைக் கூலிகள் யார்!

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது மேற்கத்திய சக்திகள் தங்களின் சுய நலனுக்காக முஸ்லிம் நாடுகளோடு பல ஒப்பந்தங்களை செய்து கொண்டன முஸ்லிம் நாடுகளுக்குப் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து அந்நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே சக்தியாக மாறவிடாது தடுத்திருந்தார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் ஒன்றை ஒன்று போட்டி மனப்பான்மையோடு எதிர்த்துக் கொண்டிருந்ததன்.

அதே சமயத்தில் இந்த மேற்கத்திய வல்லரசுகள் யூதர்களோடு கலந்துரையாடி அவர்களோடு பல ஒப்பந்தங்களையும் செய்தனர். அரபு நாடுகளோடும்

வீடுகளில் ஒழுக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துங்கள்.

.
பொய் எல்லாத் தீமைகளுக்கும் குழப்பங்களுக்கும் அச்சாணியாகவும் எல்லாப் பாவச் செயல்களின் வித்தாகவும் இருக்கின்றது.


நன்மையில் துவக்கப்படுவது நன்மையில் முடிவதைப் போல் தீயதில் துவக்கப்படுவது தீமையில்தான் முடிவடையும்.

இன்னாமஅல் அஹ்மாலு பின் நியாத் – எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையப்பெறும் என்ற நபி மொழியின் கருத்தும் இதுவேயாகும்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமும் துவக்கமும் எப்படி இருக்குமோ அதற்கேற்றவாறே அதன் முடிவும் அமையும்.