
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்கான குர்ஆன் மென்பொருளின் Screenshot கீழே:
Android Mobile Phone இன் Screenshot கீழே:


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட குர்ஆனின் iPhone மற்றும் Androidற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்:
இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிடப்பட்ட குர்ஆன் மென்பொருள் ஆங்கில மொழியாக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கீழ் தரமானவர்கள் எதில் இந்த காதியானிகள் தவறு செய்துள்ளனர் என்று சுட்டி காட்டி படம் போட்டு காட்டிருக்கிறார்களோ அது மொழியாக்கம் இல்லாத குர்ஆன். ஆக நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப இவர்கள் செய்த இந்த இழிவான செயல்மூலம் இவர்களே மகா பொய்யர்கள் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்தி காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...
எதிரிகளின் இந்த இழிவான செயல் பொறாமையின் உச்சகட்டம் என்பதை வெளிப்படுத்துகிறது. இல்லாததை இருக்கிறது என்று இட்டுக்கட்டி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் மீது அநியாயமாக பொய் கூறியுள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள த த ஜ பிரிவினர்களின் தலைவர் சகோ பி.ஜெ வும் இதில் உட்பட்டிருக்கிறார். தான் காணாத ஒரு விஷயத்தை கேள்வி பட்டு அதை அப்படியே தனது வலைதளத்தில் ஏற்றியுள்ளார். (காண: http://www.onlinepj.com/katturaikal/beware-of-qaadhiyani-quraan-app-/#.U7JhgJSSwuc) ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எவர்கள் தான் கேள்விபடுவதை எல்லாம் (தீர விசாரிக்காமல்) பரப்பி வருகிறாரோ அவர் மகா பொய்யன் என்று கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்) இவர்களை அல்லாஹ்வே பார்த்துக் கொள்வான். ஆனால் இவ்வாறான கீழ்தரமான மக்களை பாமர மக்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும். எங்களை மக்கள் முன் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் என சித்தரித்து கூறுவதற்காக இவர்கள் அல்லாஹ்வின் வசனத்திலேயே கை வைத்துவிட்டனர். இவர்களை அல்லாஹ்வே பார்த்து கொள்வான். அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் பொய்யர்கள் மீது இறங்கக்கூடியதாக இருக்கின்றது.