அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இஸ்லாமிய வரலாற்றில் ஆலிம்களின் குப்ர் பத்வாக்கள்


ஒவ்வொரு காலத்திலும் இறைவன் புறமிருந்து தோன்றிய இறைதூதர்களை அந்தக் காலத்திலுள்ள மக்கள் அக்கால ஆலிம்களின் தூண்டுதலால் கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். வேதனை தரும் இந்தக் காட்சிகளை திருக்குரானின் பல அத்தியாயங்களில் அல்லாஹ் எடுத்துரைதிருக்கின்றான். அதே போன்று முகம்மதிய உம்மத்தில் தோன்றிய முஜத்தித்களுக்கும், இமாம்களுக்கும், அவ்லியாக்களுக்கும் எதிராக அவர்களின் கால ஆலிம்கள் செய்த குப்ர் பத்வாக்களும், கொடூரமான ஈனச்செயல்களும் கொண்ட பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டாக இங்கு தருகிறோம்.

ஹஸ்ரத் ஹுசைன்(ரலி


பெருமானார்(ஸல்) அவர்களின் அருமைப்பேரர் ஹஸ்ரத் ஹுசைன்(ரலி) அவர்களுக்கெதிராக பனீ உமவிய்யா தர்பாரில் நூறுக்கும் அதிகமான காஷிமார்களும், முப்திமார்களும். கையெழுத்திட்ட பத்வாவில் அவர்களுடைய தலைவர் காஸி ஸுரைஹ் இவ்வாறு கூறுகிறார். "ஹுசைனிப்னு அலி இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து புறம் தள்ளப்பட்டுவிட்டார். ஆகவே அவர் கொல்லப்படவேண்டியவர்.
(அப்ஸலுல் அஹ்மாலி பீ நதாயிஜில் அக்மால் பக்கம் 22. ஜவாஹிருல் கலாம் பக்கம் 88 )

ஹஸ்ரத் இமாம் அபூஹனீபா (ரஹ்)

ஹனபி மத்ஹபின் தலைவராகிய ஹஸ்ரத் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைக் கொடிய காபிர் என்று பத்வா கொடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றனர். அதுமட்டுமன்று அவர்களை அடக்கம் செய்த பிறகு ஷாஹ் இஸ்மாயில் என்ற அரசர் அவர்களது கபரை உடைத்து அவர்களுடைய எலும்புகளை தோண்டி எடுத்து எரித்தார். அந்தக் கபரில் ஒரு நாயை அடக்கம் செய்து, அந்த இடத்தில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டினார்." (மஜாலிஸில் முஹ்முனீன் பக்கம் 381 )

மௌலவி அபுகாசிம் தமது "அல்ஜர்ரஹு அலா அபீஹனிபா" என்ற நூலில் பின்வருமாறு மார்க்கத்தீர்ப்பு கூறுகிறார்.

"அபூஹனீபா இஸ்லாத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். எனவே எல்லா ஹனபீகளும் இஸ்லாத்திலிருந்து வெளியேற்றபட்டவர்களாவார்கள். அபூஹனீபா ஷிர்க்கின் ஆணிவேரை நாட்டினார். எனவே அவர் முஷ்ரிக் ஆவார். அபூஹனீபாவின் வழிமுறை திருக்குரானுக்கு மாறுபட்டதாகும். அபூஹனிபாவைவிட கொடிய காபிர் வேறொருவர் இல்லை." (பக்கம் 17) மௌலானா ஷிப்லி நுஹ்மாநீ இவ்வாறு எழுதுகிறார். " ஹஸ்ரத் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களைக் கைது செய்து அவர்களுக்குத் தெரியாமலே விஷம் கொடுக்கப்பட்டது. தமக்கு விஷம் தரப்பட்டுள்ளது என்று தெரிந்ததும் அவர்கள் இறைவன் முன்னால் சிரம் பணிந்தார்கள். அந்த நிலையிலேய அவர்களது உயிர் பிரிந்தது." ( தாரிக்குல் குலபா பக்கம் 141 தஹ்தீருல் அவ்லியா பக்கம் 13, 14)

3. ஹஸ்ரத் இமாம் மாலிக் பின் ஹனஸ் (ரஹ்)

அப்பாஸி கிலாபத்தில் முப்தியான சுலைமான் என்பவர் இவர்களுக்கெதிராக குப்ர் பத்வா கொடுத்து இவர்களுக்கு எழுபது சாட்டையடி கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறினார். அந்தத் தீர்ப்பின் படி அவர்கள் குற்றவாளியைப் போல் அழைத்துவரப்பட்டு, அவர்களின் உடைகளைக் களைந்து எழுபது கசை அடி அடிக்கப்பட்டது. அவர்களின் உடல் முழுவதும் இரத்த மயமாகிவிட்டது. அவர்களின் (இரு) கை மணிக்கட்டுகளும் தமது நிலையிலிருந்து விலகிவிட்டன. அதன்பிறகு ஒட்டகத்தின் மீது இருக்கவைத்து நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள் இந்தச் சம்பவம் ஹிஜ்ரி 147 ஆம் ஆண்டு நடை பெற்றது. (சீரத் ஐம்மா அர்பஹா பக்கம் 293, 294)

4. ஹஸ்ரத் இமாம் ஷாபி(ரஹ்)

எகிப்திலும், ஈராக்கிலுமிருந்த மதபண்டிதர்கள் இவர்களை 'அலர்ரூமின் இப்லீஸ்' (இப்லீஸை விடக் கொடியவன்) என்ற பட்டம் கொடுத்தது, பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர் அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பின்படி இமாம் அவர்களைக் கைது செய்து பாக்தாதிற்கு அனுப்பினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இமாம் அவர்களை ஏசி, ஏளனம் செய்தனர். (அர்பா தக்பீர் பக்கம் 23)

5. ஹஸ்ரத் இமாம் புகாரி (ரஹ்)

ஆலிம்சாக்கள் இவர்களைக் காபிர் என்றும் சின்தீக் என்றும் கூறி நாடுகடத்தினர். (நசமுத்தூரர் பீஸ்ல்கிஸ் சயர் பக்கம் 613, 615)