அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அபூ அப்தில்லாஹ்வின் அறிவீனம்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 37 இல் “ஒரு மனிதனின் உயிர் உறக்கத்தின் நிலையில் கைப்பற்றபட்டாலும் அவனை சுற்றி நடைபெருபவைகளை அவன் அறியமாட்டான். இந்நிலையில் அவன் அவைகளின் நிமித்தம் குற்றம் சாட்டப்படவும் மாட்டான். இந்த அடிப்படையிலேயே ஈஸா (அலை) அவர்கள் 5:117 வசனத்தில் என்னைக் கைப்பற்றிய பின், உலகில் இல்லாத காலத்தில் அவர்கள் செய்தவைகளை நான் அறியேன், நீயே நன்கறிந்தவனாக இருக்கிறாய் என்று கூறுகிறார்கள். எனவே 5:117 வசனத்தை ஆதாரமாக காட்டி ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று காதியானிகள் கூறுவது அறிவீனமாகும்” என்று எழுதியுள்ளார். 


நம் பதில்:-

இவ்வாறு அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் எழுதுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي إِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118 

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதற்குகு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

5:117,118 வசனத்தில் (தற்காலிக மரணமாகிய) தூக்கம், இரவு என்ற சொற்கள் இடம் பெறவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்களைப் போன்று ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் மீனும் இவ்வுலகிற்கு வரமாட்டார் என்றும் அந்த நபி மொழி உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல, ஈஸா நபி (அலை) உயிரோடு உயர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வருவார் என்றும் உலகில் அவர் இல்லாத காலத்தில் நடந்தவைகளை அவர் அறியமாட்டார் என்பதும் தவறு ஏனென்றால் அபூ அப்தில்லாஹ்வின் தவறான கருத்துப்படி அந்த ஈஸா மீண்டும் உலகில் வரும்போது அவரையும் அவரது தாயரையும் கிருஸ்தவர்கள் வணங்கிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு மரணித்து மீண்டும் மறுமையில் இறைவனை சந்திக்கின்றபோது என்னை உயர்த்திய பிறகு நடந்தவைகளை நான் அறியவில்லை. ஆனால் மீண்டும் உலகிற்கு சென்ற பிறகு கிருஸ்தவர்கள் என்னையும் என் தாயாரையும் வணங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்றுதான் கூறவேண்டும். அப்படிக் கூறாததனால் அவர் மீண்டும் வரப்போவதில்லை என்பது தெளிவாகிறது.