அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

'லா நபிய்ய பஃதீ' - ஓர் ஆய்வு


நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறு.


ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே


ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே
அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்:

36:77; 76:2; 80:19; ஆகிய இறைவசனங்களில் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படியாயின், ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்ததாக எப்படிச் சொல்ல முடியும்? இவ்வசனங்களிலெல்லாம் ஆதத்தை தவிர மற்றவர்களை என்றல்லவா கூறி இருக்கவேண்டும். என்று நாஸ்திகர் ஒருவர் கேட்பதற்கும் இந்த காதியானிகள் 3:144 வசனம் பற்றி கேட்பதற்கும் வேறுபாடு உள்ளதாக நமக்குப் புலப்படவில்லை.


அஹ்மதியா கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் ஆலிம்கள்


திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பற்ற அஹ்மதியா ஜமாத்தின் கொள்கைகளை சில அரைகுறை ஆலிம்சாக்கள் தான் மறுக்கின்றார்களேயொழிய கற்றரிந்த மேதைகளான ஆலிம்கள் அவற்றை ஆமோதிக்கவே செய்கின்றனர்.

சவுதி அரேபியாவைச் சார்ந்த "ராபிதத்துள் ஆலமில் இஸ்லாம்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் விரிவுரையில் அல்லாமா முஹம்மத் அஸத் அவர்கள ஈசா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டார்கள், என்ற கதையை மறுத்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.


அதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு.


இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தத்கிரா பக்கம் 113-114

with regards to the death of a certain person, Allah revealed to me through the value of the letters of the alphabet that the date was comprised in the words of the revelation (Arabic) He is a dog and he will die according to the value of the letters in the word dog which amounts to fifty two this means that his age will not exceed fifty two and that he will die within the course of his fifty second year (Izala Auham pp186-187)

இந்த நூல் இலண்டனின் 1976 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஐ.நா சபையில் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஸபருல்லாஹ் கான் சாஹிப் ஆவார். இந்த இல்ஹாம் 1891ம் ஆண்டு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்களுக்கு வந்தது.

அகக்கண்ணும் புறக்கண்ணும்


பக்கம் 58 இல் அபூ அப்தில்லாஹ், மிஹ்ராஜில் நபி (ஸல்) அவர்கள், ஈஸா (அலை) அவர்களைக் கண்களால் கண்டது மிர்ஸா குலாமால் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. கண்களால் பார்ப்பதென்றால் தூல உடலுடன் தான் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்குச் சென்றிருக்கவேண்டும். கனவுக் காட்சியைக் கண்களால் கண்டதாக எந்த அறிவீனனும் சொல்லமாட்டான் என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

1) யூஸுப் நபி அவர்கள், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன். அவை எனக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். என்றும் சிறைக் கைதிகளும் மதுரசம் பிழியக் கண்டேன் என்றும், தலையில்

'கப்ல மௌதிஹீ' - ஒரு விளக்கம்


(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)

கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்'.

எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க

இறைவன் புறமிருந்து வந்த நபி "ஜமாத்துல் உலமா ஏட்டிற்கு மறுப்பு


ஒரு பொய் அது பல்லாயிரம் தடவை கூறப்பட்டுகொண்டிருந்தாலும் அது மெய்யாகாது என்பது உண்மையாயிருந்தும் கடந்த நூறாண்டுகாலமாக அஹ்மதிய்யா ஜமாத்திற்க்கும், அதன் தூய ஸ்தாபகருக்கும் எதிராக வானத்தின் கீழ் மிகப்பெரும் குழப்பவாதிகள் என்றும், கேட்ட ஜந்துக்கள் என்றும், எம்பெருமானார்(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இன்றைய ஆலிம்சாக்கள் தொடர்ந்து பொய் கூறிக்கொண்டு அல்லாஹ்வின்- "லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன்" என்ற திருவசனத்திற்க்கினங்க இறைவனது சாபத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு உதாரணமாக ஆகஸ்ட் மாத ஜமாத்துல் உலமா ஏட்டில் அதன் ஆசிரியர், பசுங்கதிர் மாத ஏட்டில் எம். கே. இ . மௌலான என்பவர் "ஆங்கிலேயர் தோற்றுவித்த நபி" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு புழுகு மூட்டையை

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;

இவ்வசனத்தில் (22:31) இணை கரிபிப்பவனுக்கு உதாரணம் கூறம் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.


அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான்.

2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும்.


கமர் என்ற சொல்லை அல்லாஹ் முதல் பிறைக்கு பயன்படுத்தியுள்ளானா? - பி.ஜே க்கு மறுப்பு


பி.ஜே யின் கேள்வி:-

கமர் என்ற சொல் மூன்று நாட்களுக்கு பிறகு உள்ள பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்று பட்டுக் கூறும் கருத்தாகும். இதற்க்கு மாற்றமாக அரபு மொழி அறிஞர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாதவன்தான் இதற்க்கு மாற்றமாக சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் இல் எழுதியுள்ளார். ஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும் இல்லாததை இட்டுக் கட்டும் மடையனும் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்ட போதும் அவர்களிடம் பதில் இல்லை.