அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

கிறிஸ்தவர்களிடம் சில கேள்விகள்.


காணமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரத்தார்களுக்குப் போதிப்பதற்காகவே இயேசு அவதரித்தார் என்றால், இரண்டே, இரண்டு இஸ்ரவேல் கோத்திரத்தார் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டில் மட்டுமே போதித்து விட்டு, சிலுவையில் இயேசு உயிர் துறந்தார் என்றால், இயேசு தமது போதிக்கும் கடமையில் தோற்று விட்டார் என்ற கூற வேண்டுமல்லவா?

புற ஜாதியாருக்கு சுவிசேசத்தை போதிக்க, ஒரு புறத்தில் தடை விதித்துவிட்டு, மறுபுறத்தில் இயேசு தமது சீடர்களை நோக்கி '....சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.' என்று கூறியது ஏன்?

இயேசு தாம் போதித்து வந்த காலத்தில் புற ஜாதியாருக்கு சுவிசேசத்தை போதிப்பதை தடுத்திருந்தும் (மத்தேயு 10:5; 7:6;15:24-26) தாம் உயிர்த்தெழுந்த பின்னர் '....நீங்கள் உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிஷேசத்தைப் பிரசங்கியுங்கள்.' என்றது ஏன்?உண்மையில் இயேசு மேற்கண்டபடி சகல சிருஷ்டிகளுக்கும் போதிக்குமாறு சொல்லியிருந்தால் புற ஜாதியாருக்குச் சுவிசேசத்தை போதிக்க வேண்டுமா வேண்டாமா?என்பது பற்றி ஆரம்பக் கால திருச்சபையில் கடுமையான வாக்குவாதம் (குறிப்பாக பேதுருவுக்கும் பவுலுக்குமிடையில்) ஏற்பட்டது ஏன்? (அப்போஸ்தலருடைய நடபடிகள்15:6-30)

இயேசு யோனாவின் அடையாளத்தைத் தமக்கு ஆதாரமாகக் காட்டினாரல்லவா? (லூக்கா11:29) யோனா தீர்க்கதரிசி மீன் வயிற்றினுள் உயிரோடு நுழைந்தார்; மீன் வயிற்றினுள் மூன்று தினங்கள் உயிருடனே இருந்தார்; உயிரோடு வெளியே வந்தார். யோனாவின் இந்த அடையாளம் இயேசுவிடம் நிறைவேற வேண்டுமாயின், அவர் பூமியின் வயிற்றில் அதாவது கல்லறையினுள் நுழைந்து உயிரோடு தங்கி இருந்து, கல்லறையை விட்டு உயிருடனேயே வெளியே வரவேண்டும். உண்மை இவ்வாறிருக்க இயேசு சிலுவையில் மரித்து,உயிரற்றவராய்க் கல்லறையில் கிடத்தப்பட்டுப் பின்னர் உயிர்த்தெழ வேண்டுமென்றிருந்தால், அவர் யோனாவின் உதாரணத்தை ஏன் எடுத்துக் கூறினார்?

இயேசு போதனை முழு மனித குலத்துக்கும் பொருந்தும் என்றால், அவர் தமது சீடர்கள் (இஸ்ரவேலர்கள் தவிர இதர) புற ஜாதியாருக்குப் போதிப்பதைத் தடுத்தது ஏன்? (மத்தேயு10:5-6)

நித்தியா ஜீவனை அடைவதற்கு (அதாவது உண்மையான இரட்சிப்புப் பெறுவதற்கு) வழி யாது? என இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, இயேசு '....நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.' (மத்தேயு 19:17) இங்கு கற்பனைகள் என்பவை மோசே தீர்க்கதரிசியின் பத்துக் கட்டளைகளைக் குறிக்கும். அக்கட்டளைகளில் தலையாயது ஏக தெய்வ வணக்கமாகும். (யாத்திராகமம் 20:3) இறைவன் மூவர் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்த இயேசு அவதரித்திருந்தால் ஏக தெய்வக் கொள்கையை மேற்கண்டவாறு ஏன் வலியுறுத்தினார்? இறைவன் மூவர் என்ற நூதனக் கருத்தில் இயேசுவுக்கு நம்பிக்கை இருந்து, மூவரில் ஒருவராகத் தாமும் இருந்திருந்தால் அக்கேள்விக்குரிய விடையாக பிதா, மகன், பரிசுத்த ஆவி ஆகியோரைக் குறித்து ஏன் கூறவில்லை?

மோசேயின் நியாயப் பிரமாணத்தை மாற்றுவதற்காகத் தாம் வரவில்லை என்றார் இயேசு (மத்தேயு 5:17) மோசேயின் நியாயப் பிரமாணம் ஏக இறைவனை வணங்குவதையே போதிக்கிறது. (யாத்திராகமம் 20:3) இறைவன் மூவர் என்ற கடவுள் கொள்கையை இயேசு புதிதாய் யூத மக்களிடையே போதிப்பதாயின், மோசேயின் நியாயப் பிரமாணத்தை தாம் மாற்றி விட்டதாகவும் ஒரு புத்தம் புதிய கடவுள் கொள்கையை அறிமுகப்படுத்துவதாகவும் அப்போது இயேசு ஏன் கூறவில்லை?

தமது சந்ததியார் தமது இரண்டாம் வருகையை காணாமல் மரணித்துப் போக மாட்டார்கள் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். (மார்க்கு 9:1,13:30) இந்தத் தீர்க்க தரிசனம் ஏன் நிறைவேற வில்லை? தமது சந்ததியாரின் வாழ்நாளிலேயே இயேசு ஏன் மீண்டும் திரும்பி வரவில்லை?

இயேசு யூதத் தலைவர்களை விரியன் பாம்புக்குட்டிகள் என்றும், விபச்சாரப் புத்திரார்கள் என்றும், தாமே அழைத்திருக்கும்போது, தம் சீடர்கள் மக்களை மூடர்கள் என்றழைப்பதை இயேசு தடுத்தது ஏன்? தேவனுடைய குமாரனாகிய ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று கூறமுடியுமா?

யூதர்கள் இயேசுவை விசாரணை செய்தபோது '... நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்க்கு அவர் : நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.' (லூக்கா 22:70) அதன் பொருள், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள் : நான் கூறவில்லை என்பது தானே. இவ்வுலகில் தமது திரு அவதார நோக்கத்தை அழகிய முறையில் எடுத்துரைக்கக் கிடைத்த இந்த அறிய சந்தர்ப்பத்தில் தமது பதிலை இவ்வாறு தெளிவற்ற வார்த்தைகளில் சொல்வதை விடுத்து 'ஆம்' என்று இயேசு தெளிவாகவும் நேரிடையாகவும் இயேசு ஏன் கூறவில்லை?

பழைய ஏற்பாட்டில் இறைவன் தாவீதை தன் முதற்பேறானவன்' (மூத்த மகன்) (சங்கீதம்89:27) என்றும், இஸ்ரவேலைத் தன குமாரன்; தன் சேஷ்ட புத்திரன் (மூத்த மகன்) (யாத்திராகமம்4:22) என்றும், இஸ்ரவேலின் மக்களை உன்னதமான தேவனின் குமாரர்கள் (சங்கீதம்82:6) சாலமோனைத் தன் குமாரன் (நாளாகமம் 22:10) என்றும், குறிப்பிட்டு அழைத்துள்ளான். இயேசுவும் சமாதானம் பன்னுவோரைக் குறித்து தேவனுடைய புத்திரர்கள் (மத்தேயு 5:6) எனக் குறிப்பிட்டுள்ளார். சொற்பொருளின் படி, இயேசு உண்மையிலேயே தம்மைத் தேவ குமாரன் (இறைவனே பெற்றடுத்த மகன்) என்று கருதினார் என்றால், பழைய ஏற்பாட்டில் உவமை வடிவத்தில் 'தேவனுடைய புத்திரன்'என்று கூறப்பட்டதற்க்கும், இயேசு தம்மைச் சொற்பொருள்படி 'தேவனுடைய புத்திரன்'என்றழைத்ததற்கும் உள்ள வேறுபாட்டை இயேசு சுட்டிக்காட்டி தெளிவு படுத்தாது ஏன்?

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களில் கூறியுள்ளபடி இயேசு மெசயாவாகத் தோன்றியுள்ளார். அந்த மெசயாவைக் குறித்து, அவர் கொலை செய்யப்படமாட்டார் என இறைவன் வாக்குறுதி அளித்துள்ளான். (சங்கீதம் 34:19; ஏசாயா 53:10) இயேசு சிலுவையில் கிடந்தது மரித்தார் என்றால், இறைவனின் திட்டம் தோல்வி கண்டதாகவும், யூதர்கள் மேசாயாவைக் கொள்வதில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் கூறும் நிலை ஏற்ப்படும், இது சரியாகுமா?

தம்மை யூதாஸ் காட்டிக் கொடுக்கப் போவதை இயேசு அறிந்திருந்தால், அவனைத் தமது சீடனாக ஏன் தொடர்ந்து வைத்திருந்தார்? தமது மற்றச் சீடர்களிடம் அதைக் குறித்து அவர் ஏன் சொல்லவில்லை? தமது சீடர்களின் நெருங்கிய பழக்கத்திலிருந்து யூதாசை விலக்கி நடத்தும் வண்ணம் அவர் ஏன் நடந்து கொள்ளவில்லை?

தமது சீடர்களின் ஒருவன் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தால், தமது பன்னிரண்டு சீடர்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பார்கள் என்று அவர் ஏன் கூறினார்?

தாம் சிலுவையில் மரணமடையப் போவதாக இயேசு ஏற்கெனவேஅறிந்திருந்தால்,கெத்செமனே தோட்டத்தில் சிலுவையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டது ஏன்? (மத்தேயு 26:39)

மனிதர்களின் பிராத்தனைகள் நிறைவேற்றப்படும் என இயேசு போதித்து வந்துள்ளார். (மத்தேயு 21:22) கெத்செமனே தோட்டத்தில் இயேசு மனமுருகிப் பிராத்தனை செய்தும், அது நிறைவேறாதது ஏன்? இயேசு போதித்ததற்கு மாற்றமாக, அவரது பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை அறியும் சீடர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியோரின் விசுவாசத்தில் இச்சம்பவம் என்ன விளைவை ஏற்ப்படுத்தும்.

கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றால், அவர் தமது சீடர்களிடம் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னதாகக் கூறியது ஏன்?

இயேசுவின் பிராத்தனை கெத்செமனே தோட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படப்போவதில்லை என்றால், தம் சீடர்களைத் தம்முடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு எதனைக் காட்ட அல்லது எதனைக் கற்ப்பிக்க இயேசு நாடினார்? அவரது பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றால் இந்த சம்பவத்தால் யாருக்கு என்ன பயன்?

மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியோர், தமக்குத் தரப்பட்ட மரணப் பாத்திரத்தை அகற்றுமாறு இயேசு வேண்டிக் கொண்டதாகக் கூறினார்கள். ஆனால் யோவான் மட்டும்,இயேசு சிலுவைத் தண்டனையை விரைந்து ஏற்க்க நாடி, '....பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பன்னாதிருப்பேனா....' என்று சொன்னதாகக் கூறியது ஏன்?

இயேசு வருகையின் நோக்கம் சிலுவையில் மரணமடைய வேண்டும்என்றிருந்தால்,பிலாத்துவின் மனைவிக்கு இறைவன் ஒரு கனவைக் காட்டி அதன் மூலம் அவள் இயேசுவை சிலுவையை விட்டு விடுவிக்குமாறு பிலாத்துவை வலியுறுத்தியது ஏன்? அது இறைவனின் திட்டத்திற்கே எய்திரானது இல்லையா?

சப்பாத்து நாள் தொடங்கும் முன்னர், யூதர்கள் இயேசுவை சிலுவையை விட்டுக் கீழே இறக்கிவிடுவார்கள் என்பதையும், இயேசு சிலுவையில் தொன்ன்கும் நேரம் குறைவானது;ஒருவன் உயிர் துறப்பதற்குப் போதுமானதல்ல என்பதையும் பிலாத்து நன்கறிந்திருந்தார். இந்நிலையில், இயேசு சிலுவையில் மரிக்க வேண்டுமென உண்மயிலேயே பிலாத்து விரும்பியிருந்தால் ஒரு வெள்ளிக்கிழமை மாலையை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

சிலுவையில் அறையுண்டு மரிப்பதே தமது வாழ்வின் நோக்கம் என்று இயேசு எப்போதும் கருதி வந்திருந்தார் என்றால் சிலுவையில் அறையப்பட்டு கிடக்கையில் எலீ! எலீ! லாமா சபக்தானி (மத்தேயு 27:46) என்று ஏன் கதறினார்?

உயிர் பிரியப்போகும் அத்தருணத்தில் இயேசு தெளிவாக உரத்த குரலில் தாம் தாகமாயிருப்பதாக எவ்வாறு சப்தம் போட முடிந்தது? (யோவான் 19:38)

எலீ! எலீ! லாமா சபக்தானி (மத்தேயு 27:46) என்ற இயேசுவின் சொற்கள் அவரது தாய்மொழியான அரமேக் மொழியில் இருப்பது ஏன்?

வினிகர் (காடி) உடலுக்குத் தெம்பளிக்கும் பானமாகக் கருதப்படுகிறது. ஆனால் இயேசு வினிகர் வழங்கப்பட்டதும் அவர் மிக விரைவாக மரணமுற்றது ஏன்? (யோவான் 19:29,30)

சிலுவையில் மரணமுற்று கிடக்கும் ஒருவனுக்கு, மயக்க நிலையில் கிடக்கும் ஒருவனுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை (மார்க்கு 15:39) அதிலும் குறிப்பாக அந்த நேரம் இருள் சூழ்ந்திருந்தபோது (மார்க்கு 15:33, மத்தேயு 27:45, லூக்கா 23:44) அந்நிகழ்ச்சியில் சம்பந்தப்படாத ஒரு பார்வையாளன் எவ்வாறு கண்டுகொள்ள முடியும்.

உயிரற்ற சடலத்திலிருந்து இரத்தமோ, நீரோ வெளிவருவதில்லை. சிலுவையைவிட்டுக் கீழே இறக்கும்போது இயேசு மரித்திருந்தால், அவரது உடலிலிருந்து இரத்தமும் நீரும் ஏன் வெளிவந்தன? (யோவான் 19:34)

இயேசுவுடன் சிலுவையில் அறியப்பட்ட இருவரின் கால்கள் முறிக்கப்பட்டிருந்தும் அவர்களை விட மிக விரைவில் இயேசு ஏன் இறந்துவிட்டார். (யோவான் 19:32)

செத்துப் போன பரிசுத்தவான்கள் தமது புதை குழியிலிருந்து புறப்பட்டு அநேகருக்குத் தம்மைக் காட்டிக் கொண்டதாக (மத்தேயு 27:52) கூறுகிறது. இந்த அற்புத நிகழ்ச்சி காரணமாக யூதர்கள் இயேசுவிடம் உடனடியாக நம்பிக்கைக் கொள்ளாதது ஏன்? இந்தப் பரிசுத்தவான்கள் எங்கே போனார்கள்? அவர்கள் யாரைப் பார்த்தார்கள்? மேலும் இந்தக் கதை, மத்தேயு சுவிசேசத்தை தவிர மற்ற சுவிசேசங்களில் காணப்படாதது ஏன்?

செத்துப்போன பரிசுத்தவான்கள் உயிர் பெற்று எழுந்த இந்தக் கதை, வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாதிருந்தால் வரலாற்று அடிப்படையற்ற வேறு எந்தெந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சுவிசேசங்களில் எழுதப்பட்டுள்ளன?

இயேசு கடவுளாக இருந்தால், அவர் பிராத்தனை செய்வதற்கு என்ன தேவை இருக்கிறது? (மார்க்கு 1:35; லூக்கா 5:16)

இயேசு கடவுளாக இருந்தால், அத்தி மரத்தில் பழங்கள் இல்லாததால், அதிலும் குறிப்பாக அந்த மரம் பழுக்கக் கூடிய பருவமாக இல்லாத போது அம்மரத்தினை இயேசு ஏன் சபித்தார்? (மார்க்கு11:12-14;மத்தேயு 21:18, 19)

இயேசு கடவுளாக இருந்தால், செபதேயு தன இரு குமாரர்களும் இயேசுவின் வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்குமாறு அருள் செய்யக் கேட்டபோது,அதற்க்கான வல்லமை தம்மிடம் இல்லை என்றும் அது தம் பிதாவுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியது ஏன்? (மத்தேயு 20:23)
இயேசு கடவுளாக இருந்தால், அவர் மிகத் தெளிவாக தம்மை மனிதன் என்று குறிப்பிட்டது ஏன்? (யோவான் 8:39-40)

தமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவைக் கூறும்போது, ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியா ஜீவன் ... எனக் கூறி கடவுளிடமிருந்து தம்மைத்தனியே பிரித்துக் காட்டியது ஏன்? (யோவான் 17:3)

இயேசு கடவுளாக இருந்தார் என்றால், யாவற்றையும் அறிந்தவராக இருக்க வேண்டும்,அவ்வாறாயின், யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுக்க அனுமதித்ததேன்?

சாதாரண மனிதர்கள் சிலுவையில் கிடந்தது மரணமடைய பல நாடர்கள் ஆகும்போது,இயேசு கடவுளாக இருந்தால், சிலுவையில் அறையப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மரணமடைந்தது ஏன்? முழு உலகப் பாவங்களையும் சுமந்ததால் அவர் பலமிலந்துவிட்டார் என்றால், முழு உலகப் பாவங்களிலிருந்து விமோசனம் தர அவர் வந்ததாக ஏன் சொல்ல வேண்டும்?
உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான். (மத்தேயு 10:40) என்று இயேசு சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் லூக்கா 10:16, யோவான்12:44வசனங்களைப் பார்க்கவும். இயேசு கடவுள் என்றால், அவரை அனுப்பியது யார்?

இயேசு பிறவிப்பாவம் (அதாவது எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகவே பிறக்கின்றன) என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து அதனைப் போதித்தார் என்றால், ஒரு மனிதன் சிறுபிள்ளையைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் அதில் நுழைவதில்லை (மார்க்கு 10:4-15) என்று ஏன் கூறினார்?

இயேசு கடவுளாக இருந்தால், அவர் பிராத்தனை செய்வதற்கு என்ன தேவைஇருக்கிறது? (மார்க்கு 1:35; லூக்கா 5:16)

இயேசு கடவுளாக இருந்தால், அத்தி மரத்தில் பழங்கள் இல்லாததால்,அதிலும் குறிப்பாக அந்த மரம் பழுக்கக் கூடிய பருவமாக இல்லாத போது அம்மரத்தினை இயேசு ஏன் சபித்தார்? (மார்க்கு11:12-14)

மத்தேயு 21:18, 19) இயேசு கடவுளாக இருந்தால், செபதேயு தன இரு குமாரர்களும் இயேசுவின் வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்குமாறு அருள் செய்யக் கேட்டபோது, அதற்க்கான வல்லமை தம்மிடம் இல்லை என்றும் அது தம் பிதாவுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியது ஏன்? (மத்தேயு 20:23)

இயேசு கடவுளாக இருந்தால், அவர் மிகத் தெளிவாக தம்மை மனிதன் என்று குறிப்பிட்டது ஏன்? (யோவான் 8:39-40)

தமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவைக் கூறும்போது, ஒன்றான மெய்த்தேவனாகியஉம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியா ஜீவன் ... எனக் கூறி கடவுளிடமிருந்து தம்மைத்தனியே பிரித்துக் காட்டியது ஏன்? (யோவான் 17:3)

இயேசு கடவுளாக இருந்தார் என்றால், யாவற்றையும் அறிந்தவராக இருக்க வேண்டும்,அவ்வாறாயின், யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுக்கஅனுமதித்ததேன்?

சாதாரண மனிதர்கள் சிலுவையில் கிடந்தது மரணமடைய பல நாடர்கள்ஆகும்போது,இயேசு கடவுளாக இருந்தால், சிலுவையில் அறையப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மரணமடைந்தது ஏன்? முழு உலகப் பாவங்களையும் சுமந்ததால் அவர் பலமிலந்துவிட்டார்என்றால், முழு உலகப் பாவங்களிலிருந்து விமோசனம் தர அவர் வந்ததாக ஏன் சொல்ல வேண்டும்?
உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான். (மத்தேயு 10:40) என்று இயேசு சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் லூக்கா 10:16, யோவான்12:44வசனங்களைப் பார்க்கவும். இயேசு கடவுள் என்றால், அவரை அனுப்பியது யார்?

இயேசு பிறவிப்பாவம் (அதாவது எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகவே பிறக்கின்றன) என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து அதனைப் போதித்தார் என்றால், ஒரு மனிதன் சிறுபிள்ளையைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் அதில் நுழைவதில்லை ( மார்க்கு ) என்று ஏன் கூறினார்