அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

சுவர்கதிற்குரிய 73 வது பிரிவு அஹ்மதிய்யா ஜமாஅத்தே - முல்லாக்களின் ஏகோபித்த கருத்து.


மௌலவி ஸபர் அலி என்பவர் கீழ்வருமாறு ஒரு அறிக்கையை விடுத்திருந்தார்; அவர் கூறுகிறார்:

"இந்த செயற்குழு (அதாவது 1974 செப்டம்பர் 6 ஆம் நாள் அன்று பாகிஸ்தான் அரசு ஒரு குழுவை அமைத்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை காஃபிராக்கியது அந்த செயற்குழு) கடந்த 1400 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக "இஜ்மாயே உம்மதிற்கான" (சமுதாயத்தில் ஏகோபித்த கருத்தை அறிகின்ற) வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காதியானிகளுக்கு எதிராக 72 பிரிவுகள் (இங்கு கவனிக்க வேண்டியது) ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஷியா, சுண்ணி, அஹ்லே ஹதீஸ், வஹ்ஹாபி, தேவ்பந்தி, பரேல்வி, ஆகிய

உண்மையான நஜாத் எது?


நஜாத் ஆசிரியர் தாமும் குழம்பி பிறரையும் குழப்புகிறார் 73 பிரிவு பற்றிய நபி மொழியில் "மன்ஹும்" என்றிருப்பதாக அவர் கூறியிருந்ததை தவறென சுட்டிக் காட்டி "மன்ஹிய" என்றே காணப்படுவதை எடுத்துக் காட்டியிருந்தோம். அதற்கு அவர் தமது இதழில் நாம் நமது இலக்கண அறிவைப் பயன்படுத்தி மக்களை வழிகெடுப்பதாக கூறி நம்மை சாடியிருக்கிறார். 

உள்ளதை, உள்ளபடி கூறுவது வழி கெடுப்பதா? அல்லது இல்லாததை இட்டுக் கட்டிக் கூறுவது வழி கெடுப்பதா? ஒன்றுக்கு பொருள் கூறுவதில் தவறு நேரலாம், கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் மூலச் சொல்லையே மாற்றி எழுதுவது அக்கிரமச் செய்யலல்லவா? இது மக்களின் அறியாமையைப்

73 பிரிவுகளில் நேர்வழிபெற்ற பிரிவு எது?


நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-

"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என நபிபெருமானாரவர்கள் பதிலளித்தார்கள்"


ஆதம் நபி சொர்க்கத்தில் வாழ்ந்தார்களா?


அந்-நஜாத் ஆசிரியர் கூறுகிறார் ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்திலிருந்துதான் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்று குரான் (2:35, 7:20,22, 20:121)ஆகிய ஐந்து இடங்களிலும் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகளிலும் தெளிவாகக் குறிப்ப்பிடப்பட்டிருக்கிறது".

இதற்க்கு விளக்கம் எழுதுவதற்கு முன் ஆசிரியர் எடுத்துக்காட்டிய ஐந்து திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

இந்த ஐந்து வசனங்கள், ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் ஒரு தோட்டத்தில் வாழச்செய்து, அங்கு ஒரு குறிப்பிட்ட மரத்தை அணுகக் கூடாது என்றும், அதைத்தவிர அவர்கள் இருவரும்

ஆதம் நபி முதல் மனிதரா?


ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களே உலகில் தோன்றிய முதல் மனிதர் என முஸ்லிம்களில் பெரும்பாலாரும் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். ஆதம் நபி முதல் மனிதெரென்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறதோ இல்லையோ திருக்குரானிலோ நபிமொழிகளிலோ அவ்வாறு கூறப்படவே இல்லை. எனவே ஆதம் நபி முதல் மனிதர் என்ற தவறான நம்பிக்கை, ஈஸா(அலை) அவர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் போன்று கிறிஸ்தவர்களிடம் இருந்து இந்த முஸ்லிம்களுக்குத் தொற்றியிருக்க வேண்டும்.

திருக்குரானில் 2:31 ஆம் வசனத்தில் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக் 'கலீபா' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலீபா' என்ற சொல், பிரதிநிதி, பின்தொடருபவர், தலைவர், ஆட்சியாளர் என்று பொருள்படும். மக்கள்

இறுதிநபி கொள்கையை கைவிட்டவர்கள்


கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில் ஒரு பிரிவினரை வழிநடத்தும் முன்னால் அந்நஜாத், அல்-ஜன்னத்

அல் ஜன்னத்தின் இறுதி நபித்துவம்


அல் ஜன்னத் இதழில் ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கேள்வி திருத்தப்பட வேண்டியதும் அதற்க்கான பதில் மறுக்கப்படவேண்டியதுமாகும்

"3:81, 33::7 வசனங்கள் நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு நபிமார்கள் வரமுடியும் எனக் கூறுவதாக என் நண்பர் வாதிடுகிறார் இது சரியா? என்பதுதான் கேள்வி.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் திருக்குர்ஆனுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான வேறு நபிமார்கள் வரமுடியும் என எந்த முஸ்லிமும் நம்பவில்லை.

ஆயினும் திருக்குர்ஆ னுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் உட்பட்டவராக இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஈசா நபி தோன்றுவார்கள்  என எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர். அது குறித்து முன்னறிவிப்புகள் திருக்குரானிலும். ஹதீஸிலும் நிறைய உள்ளன. இதனை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.

ஆங்கிலேயர்களின் கைக்கூலி யார்?


அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தாஜ்ஜாலியத்திற்கான (பொய்யர்கள்) சிறந்த உதாரணமாகும். அஹ்மதியா இயக்கத்தின் உலகளாவிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறாமையும், காழ்புணர்ச்சியும் கொண்ட அல் அமீன் ஏட்டின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

"காதியானி இயக்கம் என்ற ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூலையில் ஆங்கிலேயர்களின் ஒத்துழைப்புடன் உருவானது". 


இப்னு மர்யம் பற்றி அபூ அப்தில்லாவின் தவறான கருத்து


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.

திருக்குரானில் குறிப்பிடப்படும் எந்த நபியும் அவர் இன்னாரின் மகன் என்று குன்யத்துப் பெயரால் அல்லாஹ் அழைக்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை மட்டும் இப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயரால் இறைவன் அழைப்பதன் மர்மம் என்ன? சுமார் 2000 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட அதே ஈசப்னு மர்யம் மீண்டும் உலகில் இறங்குவார் என்பதை மக்களுக்கு சந்தேகமற அறிவிக்கவே தனது திருமறையில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஈசப்னு மர்யம் என்றே குறிப்பிடுகின்றான். 


ஷேர் அலி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை டவுன்லோட் செய்யுங்கள்.


ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் கீழ்வரும் நிகழ்ச்சி ஒன்றை கூறினார்கள்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் தோழரும் ஹாபிஸுமான முதியவர் ஒருவர் இருந்தார். இவர் கண்பார்வையற்றவர். மேலும் வயதானதன் காரணமாக அவருக்கு கேட்கும் சக்தியும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார்.

ஒருமுறை நான் ஹக்கீம் குத்புதீன் அவர்களிடம் சென்று எனது காது மந்தமாகி வருவதைத் தெரிவித்தேன். அவர் எனது காதுகள் காய்ந்திருப்பதைக் கண்டு தினமும் பால் அருந்தி வரவேண்டும் என ஆலோசனைக் கூறினார்.