அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை

திருக்குர்ஆன் விளக்கம் - ஈஸா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக தோட்டமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை – வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கையினை குறித்து சிராஜ் அப்துல்லாஹ்வின் அறியாமை


இக்காலத்தில் எல்லா இஸ்லாமிய பிரிவுகளும் பிற இஸ்லாமிய பிரிவுகளை குறைக் கூறிக் கொண்டு அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள், எனவே நாங்களே சரியான பிரிவு என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை போல் சுயமாக ஒரு பிரிவை ஏற்ப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் இக்கால மக்களை சரி செய்வதற்காக தன் புறமிருந்து ஒருவரை அனுப்பியுள்ளான். அவர் அல்லாஹ் மற்றும் ரசூலால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியும் மஸீஹும் ஆவார். அவரை பின்பற்றுவதன் மூலமே குழப்பங்களுக்கு தெளிவும் வழிகேட்டிலிருந்து நேர் வழியும் கிடைக்கும்.எனவே இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தே இக்காலத்தில் உண்மையானதாகும்.கடந்த காலத்தில் மக்கள் வழி தவறிய போது அல்லாஹ்

மிஹ்ராஜ் பயணம் ஆத்மீக காட்சியே – அந் நஜாத்திற்கு பதில்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 47, 48, இல் இவ்வாறு எழுதியுள்ளார். 

காதியானிகள், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்துள்ளதை மறுத்து வருவதை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்களின் (மிஹ்ராஜ்) விண்வெளிப் பயணத்தையும், ஆதம் (அலை) அவர்கள் சுவர்கத்திலிருந்து பூமிக்கு பூத உடலுடன் இறங்கியதையும் மறுத்து வருகிறார்கள். இதற்க்குக் காரணம் இந்த இரண்டு நிகழ்சிகளையும் உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டி வரும் என்ற தப்பான எண்ணமேயாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்கு சென்றது கனவில் கனவில் இடம் பெற்ற நிகழ்ச்சியே என்று அவர்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் குர்ஆனில் இஸ்ரா என்ற

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2


அடுத்து ஈஸா நபி (அலை) 2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும், கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.

அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என 5:76 இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.

அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா?


அந்நஜாத் அக்டோபர் 2010 இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி, 'அவர்கள் செல்வது நேர்வழி அல்ல; கோணல் வழிகளில் ஒன்றே என்பது குரான், ஹதீஸை எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகின்றவர்கள் அறிய முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதற்க்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்று, மார்க்கம் முழுமையடைந்துவிட்டது; அதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை. (5:3) அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப் படுத்தப் பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) ஆகியையாகும்.

எல்லா நபிமார்களை விட எல்லா வகையிலும் சிறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே!


அபூ அப்தில்லாஹ் பக்கம் 28 இல், தூதர்களில் சிலரை சிலரைவிட மேன்மையாக்கி இருக்கிறோம்... என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்ற எல்லா நபிமார்களையும் விட எல்லா விசயங்களிலும் உயத்த்தி இருப்பதாகச் சொல்லவில்லை என்று எழுதி, ஈஸா (அலை) தகப்பனின்றி பிறந்தது, வானிற்கு உயர்த்தப்பட்டது போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளாரா? என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. 

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

நம் பதில்:

ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.

46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை

ஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 278 இல் தாயாருக்கு நன்மை செய்யும் காலமெல்லாம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களுக்கு எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன. எனவே 29:32 வசனத்தின் பொருள் என்னவென்று பார்ப்போம் என்று எழுதியுள்ளார்.

பிறருடைய மொழிபெயர்ப்பு:

ஈஸா கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

வழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறிய அவலம்.


இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று