அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

பூமி அசையாதிருக்க நிறுவப்பட்டது மலைகளா? முளைகளா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 248 இல் முளைகளை நாட்டினோம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) 

நம் விளக்கம்: 


வானத்தில் வாசல் திறத்தல் – பி.ஜே யின் தவறான விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 177 இல் வானத்தின் வாசல் திறக்கப்பட மாட்டாது என்னும் தலைப்பில் பி.ஜே திருக்குர்ஆன் 7:40 வது வசனத்திற்கு இவ்வாறு எழுதுகிறார்.

இறைவசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிராத்தனைகள் வானத்தை அடையாது. இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்: மறுமையில் நரகத்தையும் அடைவார்கள் எனபது தான் இதன் கருத்தாக இருக்க முடியும். 



அஹ்மதிய்யத்தின் வெற்றிப் பயணம்


"நான் உமது தூதுச் செய்தியை பூமியின் எல்லை வரை எட்ட வைப்பேன்"என அல்லாஹ் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு அறிவித்தான். அல்லாஹ்வின் இக்கூற்று மிகத் தெளிவாக நிறைவு பெற்றுக் கொண்டிருப்பதை இன்றைய மார்க்க உலகம் தொடர்பாக அற்ப அறிவுடையவர்கள் கூட நன்கு அறிவார். அஹ்மதிய்யா ஜமாத்தின் வளர்ச்சியில் வெறுப்பும் பகைமையும் பொறாமையும் கொண்டவர்கள் ஒவ்வொரு நொடியிலும் பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயன்றனர். வசைமாறிப் பொழிந்தனர், கேலி செய்தனர், வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் எதிரிகளின் ஒவ்வொரு முயற்ச்சியின் விளைவும் அஹ்மதிய்யா ஜமாத்தின் வெற்றிப் பாதையின் படிக்கட்டுகளாகவே அமைந்தன. எதிரிகளின் கேலிகளும் வசைமாறிப் பொழிதல்களும் அஹ்மதியா ஜமாத்தின் மீது இறை

ஒப்புதல் வாக்குமூலம்


"நபிவழியில் செயல்படுகிறோம் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிரிவுகள், ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி, நான்கு ஐந்தாகி பல்கிப் பெருகிவருகிறது. பிரிவினை வாதத்தில் மத்ஹபு வாதிகளை இந்த இயக்க கழக வாதிகள் மிஞ்சிவிட்டார்கள். இது ஒன்றே இவர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இல்லை, வழி கேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். வழி கேட்டில் செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை லட்சமென்ன? எத்தனை கோடியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் எந்த மதிப்புமில்லை. சிப்பிகள் உடைக்கப்பட்டு, பிரித்து வெத்து சிப்பிகள் ஒரு பெரும் அம்பாரமாகவும் முத்துச் சிப்பிகள் ஒன்றிரண்டும் வைக்கப்பட்டிருக்கிற நிலையில் வெத்து சிப்பிகலான அந்த

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.


கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக. 


கனவுகள்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 122 இல் கனவுகள் எனும் தலைப்பிலும், இதர நம்பிக்கைகள் – கனவுகள் எனும் தலைப்பிலும் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இந்த அத்தியாயத்தில் (12 வது அத்தியாயத்தில்) யூஸுப் நபியின் கனவு, இரண்டு கைதிகளின் கனவு, மன்னரின் கனவு என பல கனவுகளும் அதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் கனவுகளுக்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் பல விதமாக உளறி வருகின்றனர். 


ஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் 
 
உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்புகள் ஈஸா(அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்று திருக்குர்ஆன் சான்று பகருகிறது. ஈஸா(அலை) அவர்கள் தகப்பனின்றி பிறந்தது, பிறந்த உடனே மக்களுடன் பேசியது, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும் கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது, இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா(அலை) அவர்கள் இருந்தார்கள். (பக்கம் 53) 

நம் பதில்: 


கத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1

திருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் 

இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆனால் இதனை நிரூபிப்பதற்கு திருக்குர்ஆனில் இருந்து சான்றுகளையும் விளக்கங்களையும் தருவதைவிட்டுவிட்டு இவர்கள் ஹதீத்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்களைப் பார்க்கும்போது இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பொய்நபித்துவ வாதிகளையும், தாஜ்ஜால்களையும் தவிர வேறுயாரும் தோன்ற மாட்டார் என்றும் இவ்வும்மத்தில் உண்மையான இறைத்தூதர்கள் தோன்றும் பாதை நிரந்தரமாக அடைக்கப்பட்டு பொய்வாதிகளுக்கான பாதை மட்டுமே திறந்துவிடப்பட்டிருக்கிறது என்ற பிரமை நமக்கு ஏற்படும்.

பாகிஸ்தான் தபால் தலையில் அஹ்மதியின் உருவம்


நோபல் பரிசு பெற்ற முதல் அஹ்மதி விஞ்சானி டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு அவரின் உருவம் பொறித்த தபால் தலையொன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. நம்ப இயலாத இந்தச் செய்தியை பாகிஸ்தான் நாளேடு 'டான்' வெளியிட்டுள்ளது.

அணுசக்தி துறையில் பாக். அரசின் உயர்மட்ட ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர்கள் என அந்நாடு சட்டமியற்றியதைத் தொடர்ந்து அப்பதவியை துறந்தார்கள். பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்கள்.


இரண்டாவது இயேசு வந்து விட்டார்!


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன்