அஹ்மதியா இயக்கத்திற்கெதிராக பொய்யானதும், மக்களை ஏமாற்றுவதற்கும் அடிக்கடி எதிரிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் ஆகும்.
"இஸ்மி" இதழின் "மௌலானா" இதே குற்றச்சாட்டை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்:-
"ஆங்கிலேயர் தேசத்தைக் கைப்பற்றிய போது இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உடனே அடங்கிப் போய்விட்டனர். முஸ்லிம்களோ பணிந்து அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கு என்ற