அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label பி.ஜே. Show all posts
Showing posts with label பி.ஜே. Show all posts

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை

திருக்குர்ஆன் விளக்கம் - ஈஸா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக தோட்டமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை – வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2


அடுத்து ஈஸா நபி (அலை) 2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும், கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.

அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என 5:76 இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.

அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா?


அந்நஜாத் அக்டோபர் 2010 இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி, 'அவர்கள் செல்வது நேர்வழி அல்ல; கோணல் வழிகளில் ஒன்றே என்பது குரான், ஹதீஸை எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகின்றவர்கள் அறிய முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதற்க்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்று, மார்க்கம் முழுமையடைந்துவிட்டது; அதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை. (5:3) அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப் படுத்தப் பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) ஆகியையாகும்.

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

நம் பதில்:

ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.

46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை

ஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 278 இல் தாயாருக்கு நன்மை செய்யும் காலமெல்லாம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களுக்கு எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன. எனவே 29:32 வசனத்தின் பொருள் என்னவென்று பார்ப்போம் என்று எழுதியுள்ளார்.

பிறருடைய மொழிபெயர்ப்பு:

ஈஸா கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது 

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது

இறந்தவர்கள் உயிருள்ளவர்களை சந்திக்க முடியாது


மூஸா நபி மரணிக்கவில்லை. அவர் வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் இறந்தவர்களில் ஒருவர் இல்லை என்று ஈமான் கொள்வதை அல்லாஹ் நமக்கு கடமையாக்கி இருக்கிறான். என்று மிர்ஸா குலாம், நூருல் ஹக் என்ற நூலில் 68, 69 பக்கம் இல் கூறியுள்ளார் அல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு கூறியுள்ளான்? என்று எடுத்துக் காட்டுங்கள் எனக் கேட்டோம். கடைசிவரை பதில் அவர்கள் சொல்லவில்லை. அல்லாஹ்வின் மீது பொய் சொன்னவர் எப்படி நபியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

நம் விளக்கம்: 

கோவை விவாதத்தில் இந்த வசனத்தைக் காட்டி பதில் கூறினோம். ஆனால்

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் முரண்பட்டு பேசினார்களா?


என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் காபிர் ஆக மாட்டான் என்று திர்யாகுல் குலூப், பக்கம் 423 இல் கூறியவர், என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்று ஹகீகதுல் வஹி பக்கம் 167 இல் கூறுகிறார். இப்படி முரண்பட்டுப் பேசியவர் எப்படி நபியாக இருக்க முடியும்? என்று கேட்டதற்கும் பதில் இல்லை. 

நம் விளக்கம்: 

திரியாகுல் குலூப் பக்கம் 432 இல் பி.ஜே கூறும் செய்தியை பக்கம் 431-433 வரைப் படித்தால் பி.ஜே யின் கூற்று முழுக்க முழுக்க பொய் என்றம், இவர் அந்த நூலைப் படிக்காமல் எவரோ எழுதி வைத்திருப்பதை அப்படியே எடுத்துக்

சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குர்ஆன் பல வசனங்களில் ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க முடியாது என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதாம் பாவம்

ஈஸா நபி உயிருடன் இருந்தால்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 333 இல் இறங்குமுகம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தையைப் போன்று ஆகி விடுகிறான். இது தன இவ்வசனத்தின் (திருக்குர்ஆன் 36:68) கூறப்படுகிறது.

நம் விளக்கம்.

ஈஸா நபி (அலை) வானத்திற்குச் சென்றார்கள் என்று நம்புவது இறைதூய்மைக்கு களங்கமாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 10 இல் தூய்மையானவன் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்.

ஸுப்ஹான் என்பது கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன் என்பதே பொருளாகும்.
நம் விளக்கம்:

1. திருக்குரானில் 3:192 வது வசனத்தில் “அவர்கள் நின்று கொண்டும், ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை (எப்போதும்) நினைத்துக் கொண்டிருப்பார். எங்கள் இறைவா! நீ இதனை வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன், எனவே நீ எங்களை நெருப்பின்

தவப்பா என்ற சொல்லுக்குத் பி.ஜே யின் தவறான விளக்கம்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 93 இல் கைப்பற்றி உயர்த்துதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குரானில் 3:55 வசனத்தில் முதவப்பீக என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கைப்பற்றுதல் என்றும் மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. இதில் எது சரி என்பது பற்றி முழுமையான விபரம் 151 வது குறிப்பில் காண்க.

நம் விளக்கம்:

I 93 மற்றும் 151 ஆகிய இரு குறிப்புகளையும் காண்போம். அவற்றில் தவபைத்தனி எனும் சொல்லைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது. இச் சொல்

ஆயிரம் லஹ்னத்


பி.ஜே யின் கேள்வி:

ஒருவரை சபித்துக் கட்டுரை எழுதிய இவர். இவர் மீது ஆயிரம் சாபம் உண்டாகட்டும் என்று எழுதி விட்டு 1 சாபம், 2 சாபம், 3 சாபம், 4 சாபம் என்று ஆயிரம் தடவை பல பக்கங்களில் நூருல் ஹக் பக்கம் 158 இல் எழுதியுள்ளாரே இவர் மன நோயாளியா? நபியா? என்று கேட்ட போதும் எந்தப் பதிலும் இல்லை.

நம் விளக்கம்:

அவ்வாறு சபிக்கப்பட்ட ஒருவர் யார்? பி.ஜே முஸ்லிமாக இருந்து முர்தத்தாக

மர்யமும் நானே ஈஸாவும் நானே


பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

மர்யமும் நானே! ஈஸாவும் நானே என்று கிஷ்தி நூஹ் என்ற நூலில் பக்கம் 68 இல் கூறியுள்ளாரே இவர் மன நோயாளியா, நபியா என்று நேருக்கு நேர் கேட்ட போதும் பதில் சொல்ல முடியவில்லை.

நம் பதில்.

1. நபிமார்களை அவர்களின் பகைவர்கள் கிறுக்கன், பைத்தியம், மனநோயாளி என்று அழைத்ததாகவும், அந்நபிமார்கள் பைத்தியம் இல்லை என்றும் அல்லாஹ் கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது ( 15:7, 26:28, 37:37, 44:15, 51:40, 51:53, 52:30, 54:10, 68:3, 68:52, 81:23)

கோவை விவாதம்: இமாம் மஹ்தியை (அலை) அவர்களைப் பற்றி பொய்யரின் புலம்பல்


திருக்குர்ஆன் அடிக்குறிப்பு எண் 187 (9வது பதிப்பில்) பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்:

அது போல் பாகிஸ்தானைச் சேர்ந்த காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் என்பவர் தன்னை நபி என்று வாதிட்டார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பொய்யர் என்று நிரூபணமானது.

நம் விளக்கம்:

1. ஒரு மௌலவிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. குறைந்த அளவு எதைப் பற்றி எழுதுகிறோமோ அது பற்றிய அடிப்படை அறிவு தேவை. அது பி.ஜே என்ற பொய்யருக்கு இல்லை என்று தெளிவாகிறது. பாகிஸ்தானில் காதியான் என்ற ஊர் இல்லை. அது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதனைக் கூட தெரியாதவர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நுபுவத்தைப் பற்றி எப்படி அறிந்திருக்க முடியும்?

2. அவர் வாழ்ந்த காலத்திலேயே பொய்யர் என்று நிரூபணமானது என்று கூறுகிறார். ஒவ்வொரு உண்மை நபியை பற்றியும் பகைவர்களின் புலம்பல்களையே பி.ஜே யும் கூறியுள்ளார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எடுத்துக் கொண்டால், இஸ்ரா – மிஹ்ராஜ் சம்பவத்திலும், உஹத் போரிலும், அவர்களின் மரணத்தின் போதும் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த அளவுகோலின் படி, இஸ்லாத்தின் எதிரிகள், மறுப்பவர்கள் பார்வையிலும் அவர் பொய்யர் என்று அவர் காலத்திலேயே நிரூபணமானது (நவூதுபில்லாஹ்) என்று பி.ஜே முஸ்லிம் அல்லாதவராக அதாவது ஒரு இந்துவாகவோ, யூதராகவோ, நாத்திகராகவோ பிறந்திருந்தால் எழுதியிருக்கக் கூடும்.

நபி மொழியில் வருகிறது.

மறுமையில் ஒரு நபி அவரைப் பின்பற்றுபர்கள் எவருமின்றி தன்னந்தனியே செல்வார்கள். எவரும் அவர்களின் வாழ் நாளில் பின்பற்றவில்லை என்பதினால் அவர் வாழ்நாளில் நபி இல்லை என நிரூபணமாகிவிடுமா?

பி.ஜே யின் கருத்துப்படி, ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் தம் தூதுச் செய்தியைப் போதித்தும் அவரைத் மனைவியும் மகனும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரைப் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ளவில்லை. என்பதால் பொய்யர் ஆவாரா?

நபி (ஸல்) அவர்களின் சம காலத்தில் அரபுலகில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களும், சிலை வணங்கிகளும் அன்னாரை நபி என்று ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அளவுகோலின் படியும் நபி (ஸல்) அவர்கள் பொய்யர் (நவூதுபில்லாஹ்) என்று நடுநிலை தவறியவன் எழுதக் கூடும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தோன்றிய பொய் நபிமார்கள் தம் வாழ்நாளிலே வேரோடும், வேரடி மண்ணோரும் அழிந்து போனார்கள். அதற்குப் பின்னர் நம் காலம் வரை தோன்றிய பொய் நபிமார்களுக்கும் முகவரி இல்லை. அவ்வளவு ஏன் எனக்குப் பிறகு 30 பொய் நபிமார்கள் தோன்றுவார் என்று நபி மொழியில் கூறப்பட்ட அனைத்தும் பொய்யர்களைப் பற்றியும் எந்த மௌலவிக்கும் தெரியாது. அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களைப் பற்றி பி.ஜே க்கும் முகவரி தெரிந்திருக்கிறது.

இதற்க்கு மாற்றமாக, மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் ஜமாஅத் 120 ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 20 கோடி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு கலீபாவின் கீழ் தொடர்ந்து வளர்ந்து வருவது அவர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாகும். 

மஸீஹ் வரக்கூடிய காலத்தில் பிளேக் நோய் ஏற்படும்


மஸீஹ் வரக்கூடிய காலத்தில் பிளேக் நோய் ஏற்படும் என்று குர்ஆனிலும் தவ்ராத்திலும் உள்ளது என்று கிஷ்தீ நூஹ் என்ற நூலில் பக்கம் 5 முதல் 9 வரை மிர்ஸா குலாம் எழுதியுள்ளார். குர்ஆனில் அல்லாஹ் கூறியதை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டோம். குர்ஆனில் அப்படி இல்லாததால் கடைசி வரை எடுத்துக் காட்ட முடியவில்லை. குர்ஆனில் இல்லாததைக் குர்ஆனில் உள்ளது என்று சொன்னவர் பொய்யனா? நபியா? என்ற கேள்விக்கும் கடைசி வரை பதில் இல்லை.

நம் விளக்கம்.

பீ.ஜே 34:15 வசனத்திற்கு செய்த தமிழாக்கத்தில் அவருக்கு நாம் மரணத்தை

பொய்யர் பி.ஜே யின் உளறல் – நூல்களை பதுக்கிவைத்தார்களா?


மிர்ஸா குலாம் மதத்தைப் பின்பற்றும் காதியானிகள் எதை இறைச் செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களும் சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்கு இன்று வரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப் பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதிக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி மதத்தவர்கள் மிர்ஸா குலாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் (9 வது பதிப்பு பக்கம் 1264)

நம் பதில்:

1. உலக மகாப் பொய்யர் பி.ஜேயின் இந்த உளறல், இவரது திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் 9 வது பதிப்பில் உள்ளது. இது மே 2010 இல் வெளியானது.


சனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாறினார்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 23 இல் சனிக்கிழமை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

சனிக்கிழமை முழுவதும் மீன் பிடிக்கும் தொழில் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதை அவர்கள் மீறியதால்தான் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்டனர். 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


தவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்களில் உயிரினம் வாழ முடியுமா? முடியாதா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 175 இல் இதில்தான் வாழ்வீர்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்; 

இதில் தான் வாழ்வீர்கள் என்பது பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்று அடித்துக் கூறுகிறது... எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் எனபதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது (பார்க்க திருக்குர்ஆன் 2:36, 7:10, 7:24-25, 30:25) 

நம் விளக்கம்: