அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

திருக்குரானும் இயேசுவும்


'இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருக்கிறது' என கிருஸ்தவ போதகர்கள், முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து வரும் இந்நாட்களில், இயேசுவை பற்றியும் இக்கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி அது எந்த வகையில் பைபிளுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கிட விரும்புகிறோம். 

"எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" (1 தெசலோனி 5:21) என்ற பைபிளின் போதனைக்கிசைய இக்கருத்துக்களை கிருஸ்தவ நண்பர்கள் நடு நிலை நின்று ஆராய்ந்து உண்மையெனக் கண்டவற்றை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம். 

இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்ட கதை


தம் இன மக்களுக்குப் போதித்து நல்வழிகாட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் முன்னர் அனேகமாக அனைத்து தீர்க்கதரிசிகளும் இறையடியார்களும் தனிமையை நாடிச் சென்றதாகவும், விரதமிருந்து ஏக இறைவனை வழிபாட்டு வருவதிலேயே தம் நேரத்தை செலவிட்டதாகவும் நாம் அறிவோம். மோசே தீர்க்கதரிசி சீனாய் மலைக்கும், புத்த பிரான் ஒரு போதி மரத்துக்கும், இஸ்லாம் தந்த நபிகள் நாயகம் மக்கா அருகில் உள்ள ஒரு மலைக் குகைக்கும் சென்று இறைவனை தியானித்ததை இங்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். தினசரி குடும்ப வாழ்வின் சிக்கல்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் தூர விலகிச் சென்று எவருடைய இடையூறுமின்றி இறைவணக்கத்தில் தம்மை ஈடுபடுத்தி இறைவனின் தொடர்பைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தகைய தனிமையும்

இயேசுவும் முக்கடவுள் கொள்கையும்


முக்கடவுள் கொள்கையில் அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி. என்ற மூவர் கூட்டணியில் – நம்பிக்கை வைப்பது கிருஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூவராகக் கடவுள் இருக்கிறார் என்றும் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரே கடவுளாக இருக்கிறார் என்றும், இம் மூவரும் ஒன்றாக இணைந்திருந்த போதிலும் இம் மூவரும் தனித்தனியே வல்லமையுடன் செயல்படத் தக்கவராய் இருக்கின்றனர் என்றுமே கிருஸ்தவ சமுதாயம் நம்பிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நூதனக் கொள்கையில் அவர்கள் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும். 


கிறிஸ்தவர்களிடம் சில கேள்விகள்.


காணமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரத்தார்களுக்குப் போதிப்பதற்காகவே இயேசு அவதரித்தார் என்றால், இரண்டே, இரண்டு இஸ்ரவேல் கோத்திரத்தார் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டில் மட்டுமே போதித்து விட்டு, சிலுவையில் இயேசு உயிர் துறந்தார் என்றால், இயேசு தமது போதிக்கும் கடமையில் தோற்று விட்டார் என்ற கூற வேண்டுமல்லவா?

புற ஜாதியாருக்கு சுவிசேசத்தை போதிக்க, ஒரு புறத்தில் தடை விதித்துவிட்டு, மறுபுறத்தில் இயேசு தமது சீடர்களை நோக்கி '....சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.' என்று கூறியது ஏன்?

இஸ்ரேலிய தீர்க்கதரிசி ஏசுநாதர்


இயேசு முழு உலகிற்காகவும் வந்தாரென்ற ஒரு பொய்க் கூற்றைத் தாங்கள் நம்புவதுடன், பிறரையும் நம்ப செய்யவேண்டும் என்ற ஒரு பகீரதப்பிரயத்தனத்தில் நீண்ட காலமாக கிறிஸ்தவப் பிரசாரகர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சிறிதளவு கூட உண்மையற்ற இக்கூற்றிற்கு பைபிள் ஆதாரம் இல்லையென்பதுடன், அறிவுப்பூர்வமாக சிந்தித்தாலும் இது அறவே ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது தெளிவாகிவிடும்.

வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்ற சட்டமும், உலகம் தட்டையானது என்ற வாதமும், எல்லாக்காலங்களுக்கும், எல்லா மக்களுக்கும் பொருத்தமானது என்று எந்த புத்தியுள்ள மனிதனாவது ஏற்றுக் கொள்ளமுடியுமா? இது மட்டுமின்றி, இன்னும் ஏராளமான முன்னுக்குப்பின்

கிறிஸ்தவர்களின் வினோதமான தத்துவம்


கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகப் பிறந்து சிலுவை மரணத்தை அடைந்தார் என்பதும், அவருடைய 'சபிக்கப்பட்ட மரணத்தினால்' மற்றவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பதும், பாவிகளைக் காப்பதற்கு அல்லது இரெட்சிப்பதர்க்கு சர்வ வல்லமையுள்ள தேவன் தனது மாசற்ற மகனைக் கொன்றார் என்பதும் அவர்களின்(கிறிஸ்தவர்களின்) கூற்றாக இருக்கின்றன.

ஒரு மனிதனுடைய மரணத்தினால் மக்களின் உள்ளத்திலுள்ள பாவத்தின் தீய குணத்தை எப்படி துடைக்க முடியுமென்பதும், குற்றமற்ற மனிதனைக் கொலை செய்வதன் மூலம் மற்றவர்களின் பாவத்திற்கு அதனை பரிகாரம் ஆக்குவது எவ்வாறு என்பதும் நமக்கு புரியவில்லை!


இயேசு வந்துவிட்டார்


அசன் அபூபக்கர்

இதோ வருகிறார் இயேசு என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான்