அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label ஜமாஅதே இஸ்லாமி. Show all posts
Showing posts with label ஜமாஅதே இஸ்லாமி. Show all posts

மௌதூதி சாஹிபின் அபத்தமான திருக்குர்ஆன் விளக்கவுரை


திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர் வழங்கியுள்ள வியாக்கியானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்

"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய பிடரி நரம்பை

"இறுதி நபித்துவ பேரவை"யின் சூழ்ச்சியும் இயக்கத்தின் எழுச்சியும்


அஹ்மதியா இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள முல்லாக்கள் அங்குள்ள பாமர மக்களைத் தூண்டி வன்முறையிலும் காட்டுமிராண்டித்தனத்திலும் அவர்களை ஈடிபடுத்தி வருவதைப் போன்று இங்கும் குழப்பத்தை ஏற்படுத்த சில முல்லாக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர். 'தஹப்புஸே கதமுன் நுபுவத்'.இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை இவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்தி அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக சில அபத்தமான தீர்மானங்களை வெளியிட்டிருப்பதும் பாகிஸ்தான் பயங்கரவாத முல்லாக்களை இவர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் இந்த 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' முதன் முதலில் உருவாக்கி செயல்பட்டு வருவது பாகிஸ்தானிலேயேயாகும்.


ஜமாத்தே இஸ்லாமியின் அறியாமை


அல்லாஹ் காத்தமுன்னபியீன் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் வாங்கிய ஓர் உடன் படிக்கயைப்பற்றி நபிவழி டிசம்பர் இதழில் வெளிவந்தது. அதுபற்றி (islamic foundation trust (IFT)) சார்பாக வெளியிடப்படும் மாதமிருமுறை பத்திரிகையாகிய "சமரசம்' ஜனவரி இதழில் ஒரு மறுப்புரையை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மறுப்புரைக்கு அடிப்படை மௌலவி மௌதூதியின் "தர்ஜுமானுல் குரான்" இதழில் வெளியான 'சிந்தனையை கிளறக்கூடிய' (?) பதில்கள்தான் எனவும். குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே தர்ஜுமானுல் குர்ஆனில் முஸ்லிம்களின் உள்ளம் ஒரு நபியை தான் கேட்கின்றது என்பதை மௌலவி மௌதூதியே எழுதி வைத்திருப்பதை இவர்கள் படிக்காதிருப்பது பரிதாபமே!