அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label அஹ்லே குர்ஆன். Show all posts
Showing posts with label அஹ்லே குர்ஆன். Show all posts

கரைபடியாத மறைநூல் – திருக்குர்ஆன்


“இன்னா நஹ்னு நஸ்ஸல்னாத் திக்ர வ இன்னா லஹு ல ஹாபிலூன்.” 

நிச்சயமாக நாமே இந்த திக்ரை (திருக்குர்ஆனை) இறக்கினோம். மேலும் நாமே இதன் பாதுகாவலனாக இருப்போம்” (திருக்குர்ஆன் 15:10) 

திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட மறைநூல் மட்டுமன்று அவனால் எல்லாக் காலத்திலும் பாதுகாக்கப்படுகின்ற அற்புத நூலும் கூட என இத் திருவசனம் அறிவுறுத்துகின்றது. 

வேத நூற்களாகட்டும, வேதாகமமாகட்டும் அவற்றில் இறை வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறலாமேயொழிய அவை முழுக்க முழுக்க

சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் கூற்றுக்கு பதில் (அஹ்லே குர்ஆன்)


சென்னை சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் நிர்வாகி அவர்களுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் உறுப்பினர் முஹம்மது அலி எழுதிய கடிதம் அஸ்ஸலாமு அலைக்கும்,வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.

நான் 2010 ஏப்ரல் மாத இறுதியில் சென்னைக்கு வந்திருந்தேன். அது சமயம் எங்கள் அஹ்மதி சகோதரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சில தினங்களுக்கு முன் தாங்கள் எங்கள் ஜமாஅத் சகோதரர்களை கருத்து பரிமாற்றத்திற்கு அழைத்ததால் சில சகோதரர்களுடன் தங்களை சந்தித்து பேசிய விபரங்களை என்னிடம் கூறினார்கள்.