அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label இறுதி நபித்துவம். Show all posts
Showing posts with label இறுதி நபித்துவம். Show all posts

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும்

'லா நபிய்ய பஃதீ' - ஓர் ஆய்வு


நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறு.


மௌதூதி சாஹிபின் அபத்தமான திருக்குர்ஆன் விளக்கவுரை


திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர் வழங்கியுள்ள வியாக்கியானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்

"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய பிடரி நரம்பை

"இறுதி நபித்துவ பேரவை"யின் சூழ்ச்சியும் இயக்கத்தின் எழுச்சியும்


அஹ்மதியா இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள முல்லாக்கள் அங்குள்ள பாமர மக்களைத் தூண்டி வன்முறையிலும் காட்டுமிராண்டித்தனத்திலும் அவர்களை ஈடிபடுத்தி வருவதைப் போன்று இங்கும் குழப்பத்தை ஏற்படுத்த சில முல்லாக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர். 'தஹப்புஸே கதமுன் நுபுவத்'.இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை இவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்தி அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக சில அபத்தமான தீர்மானங்களை வெளியிட்டிருப்பதும் பாகிஸ்தான் பயங்கரவாத முல்லாக்களை இவர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் இந்த 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' முதன் முதலில் உருவாக்கி செயல்பட்டு வருவது பாகிஸ்தானிலேயேயாகும்.


காத்தமுன்னபிய்யீன் - ஓர் ஆய்வு


அகிலத்திற்கும் அருட்கொடையாகத் தோன்றிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து கிடைத்த ஒப்பற்ற,மகத்துவமிக்க பட்டம் தான் காத்தமுன்னபிய்யீன் என்பது. இதைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

மாகான முஹம்மதுன் அபா அஹதின் மின் ரிஜாலிகும் வலாகின் ரசூலுல்லாஹி வ காத்தமுன்னபிய்யீன். (33:40)

'முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் காதமாகவும்(முத்திரை) விளங்குகின்றார்கள்.' (33:40)


இறுதி நபிக் கொள்கையை கைவிட்ட பி.ஜே


ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி, மார்க்கம் முழுமையடைந்து விட்டது இனி எவரும் நபியாக வரமாட்டார், வர வேண்டிய அவசியமில்லை என இதுவரை கூறிவந்த பொய்யன் ஜைனுலாப்தீன் இப்போது நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளில் நபி வர வாய்ப்பிருந்தது என்ற புதிய கருத்தைக் கூறியிருக்கிறார். அதாவது திருக்குரான் இறுதியாக அருளப்பட்ட நிலையில் இன்னொரு நபி வர வாய்ப்புள்ளது என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒற்றுமை இதழில் திருக்குரானின் மூன்றாவது அதிகாரம் என்பத்தி இரண்டாவது வசனம் மற்றும் முப்பத்தி மூன்றாவது அதிகாரம் எட்டாவது வசனம் ஆகிய வசனங்களுக்கு விளக்கம் கூறும் பொது அவர் கூறி இருப்பதை பாருங்கள்:

இறுதிநபி கொள்கையை கைவிட்டவர்கள்


கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில் ஒரு பிரிவினரை வழிநடத்தும் முன்னால் அந்நஜாத், அல்-ஜன்னத்

கத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1

திருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் 

இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆனால் இதனை நிரூபிப்பதற்கு திருக்குர்ஆனில் இருந்து சான்றுகளையும் விளக்கங்களையும் தருவதைவிட்டுவிட்டு இவர்கள் ஹதீத்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்களைப் பார்க்கும்போது இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பொய்நபித்துவ வாதிகளையும், தாஜ்ஜால்களையும் தவிர வேறுயாரும் தோன்ற மாட்டார் என்றும் இவ்வும்மத்தில் உண்மையான இறைத்தூதர்கள் தோன்றும் பாதை நிரந்தரமாக அடைக்கப்பட்டு பொய்வாதிகளுக்கான பாதை மட்டுமே திறந்துவிடப்பட்டிருக்கிறது என்ற பிரமை நமக்கு ஏற்படும்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தி நபி வருவார்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 187 இல் இறுதி நபித்துவம் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி இறுதித் தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும் தூதரும் வரவே முடியாது என்பதற்கு இவ்வசனங்கள். (4:79,170, 7:158, 9:33, 10:57,108, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) சான்றுகளாக உள்ளன. 

மனித குலத்திற்கே உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 4:79, 4:170, 6:19, 7:158, 14:52, 33:40) என்பதும் அவர்களுக்குப் பின் நபியோ தூதரோ வரமாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது.