அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

Showing posts with label முனாபிக். Show all posts
Showing posts with label முனாபிக். Show all posts

முஜாஹிதா முனாபிக்கா?


அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் அஹ்மதிகள் மீது கூறப்படுவது புதிதானதன்று.

எனினும் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கெதிராக கூறப்படும் நச்சுக் கருத்துக்களை மறுப்பதும் மக்களுக்குத் தப்பெண்ணம் ஏற்பட்டுவிடாது தடுப்பதும் எங்கள் கடமையாகும். 

அலட்டலுக்கும் வெறும் ஆவேசப் பேச்சுகளுக்கும் பேர் போன முன்னால் அரசியல்வாதி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் ஏடு நம்மைப் பற்றி புதிதாக ஒரு புரளியை ஏற்படுத்தியுள்ளது. 


குர்ஆனில் கைவைத்து தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்திய கீழ்தரமான ஆலிம்களின் செயல்


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்காக குர்ஆன் மென்பொருளில் இல்லாத எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்று எதிரிகள் இப்போது புது பொய்யை பாமர மக்கள் முன் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் சூரா ஆலு இம்ரான் வசனம் 7 இல் "பில் ஹக், பில் ஹக், பில் ஹக்" என்று இல்லாத ஒரு சொல்லை இந்த காதியானிகள் சேர்த்துள்ளார்கள் என்பதே! இது பொய்யை மூலதனமாகக் கொண்டு பிழைப்பை நடத்தும் ஆலிம்களின் செயலாகும். உண்மை எது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்:


பாதிரிகளுக்கு துணை போகும் ஆலிம்கள்


அஹ்மதிய்யா இயக்கத்தை அதன் நூறாண்டு கால வரலாற்றில் எதிர்த்திட்ட அமைப்புகள் ஏராளம். ஆனால் அவற்றில் எதுவுமே நிலைத்ததில்லை. இப்போது சென்னையில், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் முளைத்துள்ளது. ஒரு ‘இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை’. 

இவர்கள் பாதுகாப்பது இறுதி நபித்துவத்தை அன்று அவதூறுகளையும், ஆகாசப் புளுகளையுமே! இவர்களால் வினியோகிக்கப்பட்ட ‘காதியானிகளைப் பற்றி சிந்திக்க சீரிய வழி’ என்ற வெளியீடு அபத்தங்களின் மொத்த தொகுப்பு!