அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அந் நஜாத்தின் ஆகாசப் புளுகு


அந் நஜாத் ஜூலை 1987 மாத இதழில் பக்கம் 29 இதழில் "விவாதத்தில் ஆதம் (அலை) வென்றார்கள்" என்ற தலைப்பில் கற்பனை நயம் சொரிந்த கட்டுக்கதை ஒன்றைக் கண்டேன் காரணம் திருக் குரானுக்கு மாற்றமான கருத்துகள் அதில் உள்ளன.

மக்களை வழி கெடுத்து சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு (இந் நிலையற்ற அசுத்தமான ) உலகிற்கு வந்த ஆதம் (அலை) ?" என்ற மூசா (அலை) கேட்டதாக எழுதியுள்ளார்.

  • முதல் மனிதரும், முதல் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்கள் அப்போது படைக்கப்படாத மக்களை எப்படி வழிகெடுத்து இருக்கமுடியும்?
  • ஒரு நபி மறந்தோ, தவறுதலாகவோ, கவனக்குறைவாலோ தவரிலைக்கலாமே ஒழிய மக்களுக்கு வழிகாட்ட வந்த ஒருவர் மக்களை வழி கெடுத்தார் என்று நம்புவது நம்பிக்கையின் குறை பாடாகும்
  • உங்களைப் போன்ற ஒரு மௌலவியோ அல்லது சாதாரண மனிதனோ இத்தகைய கேள்விகளைக் கேட்கலாமே ஒழிய இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர், மூசா (அலை) கேட்டதாக கூறப்பட்டிருப்பது நகைப்புக்குரியது ஆகாதா?
  • இறைவன் ஆதம் (அலை) அவர்களை இந்தப் பூமியில் படைக்கப் போவதாக திருக்குரானில் கூறியிருக்க, சுவனத்திற்கு அவரை அழைத்துச் சென்றதாக திருக்குரானிலும், ஹதீஸிலும் கூறப்படாதிருக்க போகாத இடத்திலிருந்து எங்கனம் வெளியேற்றப்பட்டார்? சுவனத்தில் நுழைந்தவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள் என்றும் அதிலிருந்து வெளியேற்ற பட மாட்டார்கள் என்றும் உள்ள இறைவனது வசனங்கள் எப்பொழுது ரத்தானது? 

  • இந்த நிலை அற்ற அசுத்தமான உலகம் என்று கூறப்பட்டிருப்பது சொர்க்கதோடு ஒப்பிட்டு கூறியிருக்கலாம். ஆனால் நிலையற்ற அசுத்தமாக்கப்பட்ட அந்த உலகில் தான் நபி(ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து, மரணித்திருக்கிறார்கள் என்று என்னும் போது, இந்த உலகை மகா மட்டமாக வர்ணித்திருப்பது வருந்த தக்கதாக இல்லையா? 

  • ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்தில்தான் வாழ்ந்திருந்தார்கள் என்பதை தகுந்த போதிய திருக்குரான் ஆதாரங்களால் நிருபிக்கமுடியுமா ?
நீங்கள் தானே! அல்லாஹ்வினால் எல்லா அறிவு அருளப்பட்டு மக்களுக்கு அச்செய்தியை போதிக்க அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூசா (அலை)? என்று கூறப்பட்டுள்ளது.
  • மூசா(அலை)அவர்களுக்கு அல்லாஹ்வினால் எல்லா அறிவும் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருப்பதற்குரிய திருக்குரான் சான்று என்ன? 

  • இஸ்ரவேல் சந்ததியினருக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட ஒரு நபிக்கு எல்லா காலத்திற்குரிய எல்லா அறிவும் கொடுக்கப்பட்டதுபோல் கூறப்பட்டிருப்பது தவறில்லையா? 

  • திருகுரான் வசனங்களில் "அந்த அடியாரை சந்தித்தபோது, மூசாவைவிட அதிகமான அறிவையும், அருளையும் அந்த நல்லடியாருக்கு கொடுத்திருப்பதாகவும் மூசா(அலை) அதனை கற்றுக்கொள்ள அவரை பின்பற்றிச் சென்றதாக, கூறப்பட்டிருப்பதில் இருந்து , மூசா (அலை) காலத்திலேயே எல்லா அறிவும் அருளும் மூசா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லையா? 

  • திருக்குரானில் மூசா(அலை) அவர்கள் செய்த துவாவானது பிர்அவ்னோடு பேசுவதற்கு வேண்டிய அறிவையும், ஆற்றலையும், இறைவனிடம் கேட்டு மன்றாடியதிலிருந்து எல்லா அறிவும் அருளும் கொடுக்கப்படவில்லை என்பது விளங்கவில்லையா? 
நான் படைக்கப்படுவதற்கு முன்பே நான் இப்படி இருக்க வேண்டும் என (அல்லாஹ்வினால் எனது தக்தீரில் எழுதப்பட்டிருக்க) என் மீது தாங்கள் பலி சுமத்தலாமா? என்று ஆதம் (அலை) கூறியதாக கூறப்பட்டுள்ளது.
  • ஒரு மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவர் இப்படி, இப்படி இருக்க வேண்டும் என்று அவரது தக்தீரில் இறைவன் எழுதியிருக்கிறான் என்றால் அவர் செய்கின்ற எந்த பாவத்திற்கும் தவறுக்கும் அவர் பொறுப்பாளி ஆகமாட்டரே? 

  • இறைவன் அதுசம்பந்தமாக கேள்வி கணக்கு கேட்பதோ, தண்டனை வழங்குவதோ என்ன நியாயத்தில் சேர்ந்தது? 

  • இறைவன் மக்களுக்கு நேர்வழி கட்டுவதற்கும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், நபிமார்களையும், வேதங்களையும் அனுப்புவது வீண் வேலை இல்லையா? 

  • ஒரு மனிதன் இறைவனால் அவனது தக்தீரில் எழுதப் பட்டபடிதான் செயல்படுவான் என்றால் இதயம், மூளை போன்றவற்றை படைத்திருப்பது வீணுக்கா?
("இப் பகுத்தறிவு பதிலால் மூசா (அலை) வாயடைத்துப் போனார்கள். இவ்விதமாக ஆதம்(அலை), மூசா (அலை) அவர்களை வென்றார்கள்". என்று கூறப்பட்டுள்ளது.

இதைப் பகுத்தறிவு பதில் என்று சொல்வதற்கு உங்கள் பகுத்தறிவு எப்படித்தான் இடம் கொடுத்ததோ? மூசா (அலை) கேட்கக் கூடாத கேள்வியை கேட்டுவிட்டு வாயடைத்துப் போனார்கள் என்றால் அவர் ஒரு நபி என்ற தர்ஜாவை விட்டு கீழே வந்து விடவில்லையா? அத்துடன் எல்லா அறிவும் பெற்றுள்ளதாக மூசா (அலை) அவர்களைப் பற்றி முன்னால் கூறியிருப்பதற்கு முரண்பாடாக அமையவில்லையா? 

சாதாரண மக்களைப் போல இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட நபிமார்களும் ஒருவருக்கொருவர் விவாதம் செய்து வெற்றி தோல்வி காண்கின்ற திருவிளையாடல்கள் செய்கின்றர்களா? 

திருக்குரான் கூறுகின்ற நபிமார்களுடைய பண்புகளுக்கு மாறுபட்ட முறையில் இரு நபிமார்களும் ஒருவரை ஒருவர் புரியாமல் விவாதம் செய்தார்கள் என்று, எல்லா அறிவும், அருளும் முழுமையாக வழங்கப்பட்ட எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாக உள்ள ஹதீதை திருக்குரானுக்கு முரணாக உங்களுக்கு தோன்றவில்லையா? இதை சஹீஹான் ஹதீஸ் என்று நம்ப முடியுமா?