நீங்கள் பிறரைப் பார்த்துப் பௌதீகத் துறைகளில் அவர்கள் மிகவும் முன்னேறியிருப்பதைக் கண்டு நாமும் அவர்களைப் பின்பற்றுவோம் என்று அவர்களின் வழியில் நடக்காதீர்கள். கேளுங்கள்! உணருங்கள் ! இவர்கள் உங்களை தன் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கும் இறைவனை விட்டு வெகுதூரம் போய் விட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் வணங்கும் இறைவன் மிகவும் பலவீனமான ஒரு மனிதனே! அதனால் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நான் உங்களை பொருள் சம்பாதிக்கவேண்டாமென்றோ தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டாமென்றோ கூற வில்லை. ஆனால் அனைத்தும் இவ்வுலகமே என்று அதிலேயே மூழ்கியுள்ள உலகத்தின் அடிமைகளை நீங்கள் பின்பற்றக் கூடாது என்றே கூறுகின்றேன். ஆன்மீக முன்னேற்றத்திற்கும், பௌதீக
முன்னேற்றத்திற்கும். இறைவனிடமிருந்தே பலமும் உதவியும் தேடுகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்விதம் உதவி தேடுவது காய்ந்த உதடுகளினால் அல்ல. மாறாக வானத்திலிருந்தே ஒவ்வொரு அருளும் இறங்குகின்றது என்ற உளப் பூர்வமான நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியின்போதும், ஒவ்வொரு கஷ்ட நேரத்திலும் திட்டங்களை தீட்டுவதற்கு முன்னாலும் உங்கள் வாசற்கதவுகளை மூடிவிட்டு இறைவனின் சந்நிதியில் சிரம்பணிந்து, இறைவா! எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்கியருள்வாயாக என்று பிராத்தனை செய்யுங்கள் இவ்வாறு நீங்கள் செய்து கொண்டிருந்தால்தான் நீங்கள் நல்லடியார்களாகத் திகழ முடியும். ரூஹுல் குத்தூஸ் என்னும் தூய ஆன்மா இறங்கி உங்களுக்கு உதவி புரியும். மறைமுகமாக ஏதாவது ஒரு உதவி உங்களுக்காகத் திறக்கப்படும். உங்களின் உயிர் மீது நேசம் கொள்ளுங்கள். இறைவனோடு உள்ள உறவை முற்றிலுமாக முறித்துவிட்டு உலக விவகாரங்களிலே மூழ்கி இறைவுதவிக்காக இன்ஷா அல்லாஹ் என்று வாயால் கூட சொல்லாத மக்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (கிஷ்தி நூஹ்)