இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை உலகில் பெறும் மாற்றம் ஏற்பட்டு விடும். அதன் பிறகும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை.
அக்கால மக்கள் தங்களுடைய அறிவு வளர்ச்சியால் இத்தகைய மூடநம்பிக்கைகளை வெறுப்புடன் நோக்குவார்கள். அந்த காலத்தில் மூன்று நூற்றாண்டுகள் முடிவு பெற்றிருக்காது. எவெரேல்லாம் ஈசாவின் வருகைக்காக காத்து கொண்டிருந்தார்களோ அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தனது மூடநம்பிக்கையினால் நிராசையடைந்து, பரிதாபத்திற்குரிய நிலையில் வேறுவழியின்றி அக்கொள்கையை கைவிட்டு விடுவார்கள். ஒரு தலைமையின் கீழ் உலகம் இயங்கும். அதற்கு விதையிடவே நான் வந்திருக்கிறேன். அதற்கான பணிகளுக்காகவே எனது கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அந்த விதைகள் வளர்ந்து பல்கிப் பெருகும். அவை பூக்களாக மலர்ந்து பழங்களை தரும். அதனை உலகில் எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது. (தத்கிரத்துஷ் ஷஹாததைன்: பக்கம்: 64-69)