ஹதீஸ்களிலும் காதியானிகள் கை வரிசை என்ற எனும் தலைப்பில் பக்கம் 56 இல் கூறுகிறார் நான் ஈஸாவையும், மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும், விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்)
நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட பொது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)
............ஜக்து என்ற பதத்திற்கு சுருண்ட கேசம் என்பது மட்டும் பொருளல்ல. உறுதியான உடம்பிற்கும் ஜக்து என்று சொல்லலாம்.ஆனால் அது தனியாக ஜக்து என்று மட்டும்கூறப்பட்டிருப்பதால் சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. ஜக்து என்ற சொல்லுடன் க்ரு என்ற சொல் இணைக்கப்பட்டு ஜக்துக்ரு என்று கூறப்பட்டிருந்தால் மட்டுமே சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியும். குறிப்பிட்ட அந்த ஹதீஸில் ஜக்துக்கு முன்னாள் சிவந்த மேனி என்றும் ஜக்துக்கு பின்னால் அகன்ற நெஞ்சு என்றும் உடலின் அமைப்பைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் மத்தியில் உள்ள ஜக்து என்ற சொல்லுக்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. என்று அபூஅப்தில்லாஹ் எழுதுகிறார்.
நம் பதில்:
1. ஒரு வாதத்திற்காகக இந்த புளுகு மூட்டையை ஏற்றுக் கொண்டாலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹீ) அவர்கள் இரு நபிமார்களுடைய தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதவில்லை. என்பதைக் கவனித்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. முதலாவது ஹதீஸில் ஈஸா நபி (அலை) அவர்களை மூஸா நபி (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து அந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டவர் மூஸா நபியுடன் தொடர்புள்ள மஸீஹ் என்பது புலனாகிறது. இரண்டாவதாகக் கூறப்பட்ட மஸீஹ் பிற்காலத்தில் தோன்றுபவர் என்பதற்கு ஆதாரமாவது, அந்த ஹதீஸை தொடர்ந்து வரும் வாசகங்களில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தஜ்ஜாலின் குழப்பம்மிகுந்த காலத்தில் தோன்றுவார் எனக் கூறப்பட்டிருப்பதேயாகும்.
2. இப்னு மர்யம் தோன்றும் போது உங்களுடைய நிலைமை எவ்வாறு இருக்குமோ? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாம்மாக இருப்பார். (புகாரி முஸ்லிம் : நுஸுலிப்னு மர்யம்) எனும் நபி மொழியைக் கூறி உங்களிலிருந்து தோன்றி, உங்களுக்கு இமாமாக இருப்பார் என்று இந்த நபிமொழியில் வந்திருப்பதால் இதில்கூறப்பட்டிருப்பவர் முஸ்லிம்களிலிருந்தே தோன்றும் ஒருவர் என்பதை உறுதி செய்கிறது.
3. உங்களுள் உயிருள்ளவர் ஈஸப்னு மர்யமைச் சந்திப்பார் அவர் மஹ்தியாகவும் தீர்ப்புவழங்குபவராகவும். நீதியை நிலைநாட்டுபவராகவும் விளங்குவார். (முஸ்னது அஹ்மதிப்னு ஹம்பல் – பாகம் 2, பக்கம் )
4. ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ் ஸமான்)
5. இதன் காரணமாகவே இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும் தத்தமது ஹதீஸ் தொகுப்புகளில் இப்னு மர்யமின் வருகையைப் பற்றியும் இமாம் மஹ்தியைப் பற்றியும் தனித்தனியாக வெவ்வேறு அத்தியாயங்கள் அமைத்து குறிப்பிடாமல் ஒன்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலே குறிப்பிட்ட ஐந்து ஆதாரங்களையும் அபூ அப்தில்லாஹ் வழக்கம்போல் பதில் தரவில்லை.
ஜக்து என்ற சொல்லை ஆராயப் புறப்பட்ட அபூ அப்தில்லாஹ் இப்னு மர்யம் ஒரு நபிமொழியில் மூஸா (அலை) அவர்களுடனும் இன்னொரு நபி மொழியில் தஜ்ஜால் மற்றும் கஹ்பதுல்லாஹ்வுடனும் வருவதால் ,ஒருவர் இஸ்ரவேலர்களுக்காக வந்த ஈஸா(அலை) என்றும் மற்றொருவர் கஹ்பதுல்லாவுடன் தொடர்புடையவர் என்றும் பிரித்தறியதவறியது ஏன்? ஜஅது என்பதற்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது அண்டப் புழுகேயாகும். ஏனெனில் Islamic Universiy Madina – வின் Dr.Momammad Muhsin Khan ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள Sahih Bukhari Arabic English மொழியாக்கத்தில் பாகம் – 4 பக்கம் – 432-433 ஹதீஸ் எண் 648-649 இல் ஜஅது என்ற சொல்லுக்கு Curly Hair (சுருண்ட முடி) என்றே மொழி பெயர்த்துள்ளார்கள். தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹதீஸ் எண் 650இல் இரண்டு மஸீஹுகளைக் குறிப்பிட்டு ஒன்று ஸப்துஷ் – அர் இன்னொன்று ஜஅதுஎன வந்துள்ளது. அதாவது ஒருவர் நீளமான முடியுடையவரும் இன்னொருவர் சுருண்ட முடியுடையவரும் ஆவார் என்றே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழில் வெளிவந்த புகாரி மொழிபெயர்ப்பிலும் ஜஅத் என்ற சொல்லுக்கு சுருள் முடி உடையவர் என்ற மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.(ஆதாரம் புகாரி -3438)