அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இமாம் மஹ்தியின் வருகையும் - அல் ஜன்னத் ஏட்டின் அறியாமையும்.


ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றியது பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'அல் ஜன்னத்' இதழில், அதன் ஆசிரியர் அளித்துள்ள ஒன்றரைப் பக்கபதிலில், ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றித் தமது அறியாமையை. வெளிப்படுத்தி இருப்பதோடு தமது ஆணவத்தையும் பறை சாற்றியிருக்கிறார்.

அவர் தமது அறியாமையிலிருந்தும், ஆணவத்திலிருந்தும் விலகி நல்லவராகவேண்டும் என்பதற்காக சமாதானவழி இதழ் மூலமாக அவருக்கு சில அறிவுரைகளைக் கூறப்பட்டிருந்தது


இதன் தொடர்ச்சியாக 'அல் ஜன்னத' ஆசிரியருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் தெரியாத ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து, சில எச்சரிக்கைகளையும் விடுக்க விரும்புகின்றேன்.

கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த ஆசிரியர் அளித்த பதிலில், " இமாம் மஹ்தி பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தது உண்மையே. அவர்கள் வருவார்கள் என்பதை எல்லா முஸ்லிம்களும் நம்பவேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நபர் மஹ்தி இல்லை. அவன் ஒரு பச்சைப் பொய்யன் (நவூதுபில்லாஹ்). அவன் பெரும் பொய்யன் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 

நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க முடியும்.

மஹ்தி என்னுடைய சந்ததியில் தோன்றுவார். அதாவது பாத்திமாவின் சந்ததியில் தோன்றுவார் என்பது நபிமொழி. அபூதாவூதில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பொய்யன் பாரசீக வமசத்தைச்சார்ந்தவன். உங்கள் கேள்வியிலேயே அதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த பொய்யனின் நூல்களிலும் அது கூறப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் சந்ததியில் தோன்றவில்லை. பாரசீக வம்சத்தில் - அந்த காதியானிகள் கூற்றுப்படி சல்மான் பார்ஸி வமசத்தில் அவன் பிறந்தான். அவன் பொய்யன் என்பதற்கு இது முதலாவது சான்று." என்று குறிப்பிட்டு தமது அறியாமையையும், ஆணவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித்தோன்றலுமாவார்கள் என்று கூறுவதற்கு முன்னர், இங்கு ஓர் அடிப்படை உண்மையை கூறிவிட விரும்புகின்றேன்.

எவர்களிடம் தங்கள் கருத்திற்கு சரியான சான்றுகள் இல்லையோ அவர்கள், கடும்கோபம் கொண்டு தரக்குறைவாகப் பேசுதல், வசைமாரிப் பொழிதல், திட்டுதல், அடிதடியில் இறங்குதல் முதலானவற்றில் ஈடுபடுவர் என்பதே அந்த அடிப்படை உண்மையாகும்.

இது தனிப்பட்டவர்களிடத்திலும் சமுதாயத்திடத்திலும் காணப்படும் ஒரு பலவீனமாகும். ஆதாரம் இல்லையெனில் இவர்களெல்லாம் ஆத்திரத்தையே காட்டுவார்கள். இது எப்போதும் காணப்படும் செயலாகும்.

'அல் ஜன்னத் ஆசிரியர் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பற்றிய தமது கருத்துக்கு சரியான சான்றுகள் இல்லையாதலால். அவர்கள் மீது கடுங்கோபம் கொண்டு, அவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதிலும் வசைமாரிப் பொழிவதிலும் இறங்கியுள்ளார். சந்தர்ப்பம் கிடைத்தால்,அவர் தமது ஆட்களுடன் அடிதடியிலும் இறங்கிவிடுவார் என்பதில் ஐயம் இல்லை. இதற்க்கு உதாரணம் இருக்கிறது. (JAQHஅணியினருக்கும் அஹ்மதியா தரப்பினருக்கும் இடையே கோவையில் ஒன்பது நாட்கள் நடைபெற்ற விவாதம் முழுவதும் வீடியோ (70மணிநேரம்) எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பொய்யர்கள் கடைசி மூன்று நாட்கள் நடைபெற்ற விவாதத்தை மட்டும் மக்களுக்கு போட்டுக் காட்டினர். இதன் மூலம் அஹ்மதிகள் அடுக்கடுக்காக ஆதாரங்கள் காட்டியதையும், ஜாக்கின் கையிருப்பில் எதுவும் இல்லாததையும் மக்கள் மத்தியில் மறைத்தனர். இதை அம்பலப்படுத்தும் விதமாக கோவை அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தினர் கோவையின் முக்கிய வீதிகளில் பிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜாக் குண்டர்கள் அஹ்மதிகள் மீது தாக்குதல் நடத்தினர். நோன்பு நேரத்தில் இவர்கள் இந்த அக்கிரம செயலில் ஈடுபட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.)

அல் ஜன்னத் ஆசிரியரின் பதிலிலிருந்து அவர் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் நூல்களைப் படித்ததில்லை என்பதும் அஹ்மதிய்யா ஜமாத்தைப் பற்றிய அவரது அறிவு பூஜ்யம் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி அவர்களின் கொடிய பகைவர்கள் எழுதியவற்றை படித்து அல்லது அந்தப் பகைவர்கள் கூறியவற்றை கேட்டு, அவற்றை உண்மை என்று நம்பி,ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சந்ததியில் தோன்றவில்லை என்று சிறிதும் இறையட்சமின்றி துணிச்சலாக வாதிக்கிறார் 'அல் ஜன்னத்'ஆசிரியர்.

இவ்வாறு தமக்குத் தெரியாத ஒன்றை அல்லது தாம் முழுமையாக அறியாத ஒன்றை உறுதியுடன் கூறுபவர்கள் பொறுப்பற்றவர்களும், இறையச்சமற்றவர்களுமேயாவார்கள்.

எனவே அவர் உண்மையினைத் தெரிந்து உண்மையான முஸ்லிமாகவும் மூமினாகவும் நாளை- மறுமையில்- இறைவனிடம் செல்லவிரும்பினால், அவருக்கு நாம் கூறும் அறிவுரை, அவர் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் நூல்களையும் அவர்களின் ஜமாத்தைச் சார்ந்த சான்றோர்களால் எழுதப்பட்ட நூல்களையும் நடுநிலையில் நின்று நன்கு கருத்தூன்றிப் படித்து உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதேயாகும்.

அவர் அவ்வாறு செய்ய வில்லை என்றால், பொய்களைச் சொல்லிய குற்றத்திற்காகவும் வழி தவறிச் சென்றதற்காகவும் மட்டுமல்லாமல் பிறரிடம் பொய்யுரைத்து அவர்களையும் வழிதவறச் செய்த குற்றத்திற்காகவும் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் இறைதண்டனைகளுக்கு அவர் ஆளாவார். இது குறித்து அவர் அலட்சியமாக இருக்கமாட்டார் என்று எதிபார்க்கிறோம்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பொய்யரென்று நிரூபிக்க மட்டுமே அந்த ஆசிரியருக்கு ஆசையிருந்தால், அதற்காக அவரை திட்டவோ வசைமாரிப் போழியவோ தரக்குறைவாகப் பேசவோ,அறவே அவசியமில்லை. மாறாக அதற்க்கு ஒரு எளிமையான ஒரு வழி உண்டு.

அந்த ஒரே வழி, ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் எல்லா வாதங்களுக்கும் முதலாகவும் அடிப்படையாகவும் இருப்பது. 'ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்' என்ற அவர்களின் வாதேமேயாகும்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்பதை, இறைவனே பலமுறை தனது வஹீ என்னும் இறையறிவிப்பின் மூலம் எனக்கு அறிவித்தான் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல், ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இன்று வரை ஆண்டுகளாக மரணமடையாமல் உடலுடன் வானத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர்களே வானத்திலிருந்து இவ்வுலகிற்கு மீண்டும் ஒருமுறை வருவார்கள் என்றும் எவராவது திருக்குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்துவிட்டால், எனது மற்றெல்லா வாதங்களும் போய்யானவையே ஆகும் என்று நான் ஏற்றுக்கொண்டு,எனது எல்லா நூல்களையும் எரித்து சாம்பலாக்கிவிட்டு, என்னுடைய இந்த அஹ்மதிய்யா ஜமாத்தை கலைத்து விடுவேன் என்று உறுதி கூறியுள்ளார்கள்.

அவர்களைப் பின்பற்றி நாங்களும் 120 ஆண்டுகளாக உலகிற்கு சவால் விடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவே 'அல் ஜன்னத்' ஆசிரியர் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பொய்யர் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்ட விரும்பினால். இந்த சவாலை ஏற்க்க முன்வரட்டும். இந்த இலேசான வழியை விட்டு விட்டு அவர் ஏன் எங்கெங்கோ செல்கிறார்.

இதில் மூன்றாவது கருத்திற்கு அறவே இடமில்லை. எனவே, இந்த இரண்டு கருத்துக்களுள் (ஓன்று, ஈசா (அலை) மரணமடைந்து விட்டார் என்பது; இரண்டு, அவர்கள் மரணமடையவில்லை என்பது) ஏதாவது ஒன்றைத்தான் அவரால் அறிவிக்க முடியும்.

ஆனால், அவர் இந்த இரண்டு கருத்துக்களுள் ஏதேனும் ஒன்றினை அறிவிக்கவில்லை என்றால், அவர் உண்மையினை மறைத்து, அவர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றே பொருள் படும்.

மேலும் இவர்களைப் பற்றி அறிவிப்பதன்மூலம் 'அல்ஜன்னத்' ஆசிரியர் பொய்யரா? அல்லது ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பொய்யரா? என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.

ஈசா நபியின் பிரச்சினை அவசியமற்றது எனக் கூறுவது, திருக்குரானின் கருத்துக்களை அலட்சியப்படுத்துவதற்க்குச் சமமேயாகும். மேலும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள்,இவ்விஷயத்தையே தங்களின் எல்லா வாதத்திற்கும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள்.

எனது வாதத்தின் அடிப்படையே இவ்விஷயம்தான். எனவே நீங்கள் இதை தகர்த்துவிட்டால்,எனது ஜமாத்து என்னும் கட்டிடமே தகர்ந்துவிடும் என்று அவர்களே கூறியிருப்பதையே இங்கு மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்.

அடுத்து, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையையும் அந்த ஆசிரியருக்குத் தெரிவித்து விடுகின்றோம். தங்களை எதிர்ப்பவர்களை பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்:

"இறைவன் எவரை முன்னறிவிக்கப்பட்ட மஹ்தியாகவும், மஸீகாகவும் தோன்றச் செய்து,அவரது உண்மைக்கு நூற்றுக்கணக்கான அடையாளங்களையும் காட்டியுள்ளானோ, மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர்களை அஹ்லே பைத்தில் (தங்கள் வழித்தோன்றளைச் சார்ந்த) ஒருவர் என்றும் எல்லா நபிமார்களின் தன்மைகளையும் கொண்டவர் என்றும் கூறியுல்லார்களோ அவர்களை வசைமாறிப் பொழிவது. அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் தாக்குவதேயாகும்." (நுஸூளுள் மஸீஹ், பக்கம் 50)

ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித் தோன்றலுமாவார்கள்

"ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள், எனது வழித் தோன்றலை அதாவது பாத்திமாவின் வழித் தோன்றலைத் சார்ந்தவர்களாவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பது அபூதாவூதின் அறிவிப்பாகும். (கன்சுல் உம்மால், பாகம் 6, பக்கம் 688)

இந்த நபிமொழி குறித்து ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பின்வருமாறு வரைந்துள்ளார்கள்:

"நான் ஹஸ்ரத் பாத்திமாவின் வழித் தோன்றலாக இருக்கின்றேன். என்னுடைய பாட்டிமார்களுள் சிலர், ஹஸ்ரத் பாத்திமா(ரலி) அவர்களின் புகழ் பெற்ற - சரியான வம்சா வழியைச் சார்ந்தவர்களாவர்கள்.

ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களைச் சார்ந்த பல பெண்கள், எங்கள குடும்பத்தில் மணமுடித்துக் கொடுக்கப்பட்டனர். அவ்வாறே எங்கள குடும்பத்தைச் சார்ந்த பல பெண்கள் அவர்களின் வீடுகளுக்கு மணமகளாகச் சென்றனர். இந்தச் சம்பந்தத் தொடர்பு எங்கள குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது.

எங்கள குடும்பத்திற்கு கிடைத்த மகத்தான இந்தச் சிறப்பு, மக்கள் மட்டும் கூரியதன்று. எனினும் இறைவனும் தனது புனிதமான வஹி என்னும் இறையறிவிப்பின் மூலம் அதனை உண்மைப்படுத்தியுள்ளான்.

அதாவது இறைவன் எனக்கு அறிவித்த வஹியில், "உம்மை ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித்தோன்றலாகவும் அவர்களின் வழித் தொன்றளைச் சார்ந்த ஒரு பென்னிர்க்குக் கணவராகவும் ஆகிய இறைவனுக்கே எல்லாப் புகழும். எனவே உமக்குச் செய்த ஏன் அருட்கொடைக்கு நீர் நன்றி செலுத்துவீராக" என்று கூறியுள்ளான்.

ஆகவே இறைவன் என்னை ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித் தோன்றல்களிலிருந்து படைத்து, அவர்களிலிருந்தே ஒரு பெண்ணையும் எனக்கு மணமுடித்து வைத்து ஏன் குடும்பத்திற்கு மதிப்பையும் மரியாதையையும் வழங்கியுள்ளான்.

எனது துணைவியாராகிய ஸய்யிதா நுஸ்ரத் ஜஹான் பேகம் அவர்கள்,ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித்தொன்றளைச் சார்ந்த - டில்லியில் வாழ்ந்து வந்த - மீர்தர்து என்பவரின் குடும்பப் பெண்ணாவார்.

இன்றிலிருந்து (1-9-1902 இலிருந்து) முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்,நான் கண்ட கஷ்ப் என்னும் ஓர் ஆத்மீகக் காட்சியினை எனது நூலான'பராஹீனே அஹ்மதிய்யாவில் வரைந்துள்ளேன்.

நான் கண்ட அந்தக் கஷ்பில்,

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) ஹஸ்ரத் பாத்திமா(ரலி), ஹஸ்ரத் ஹசன் (ரலி), ஹஸ்ரத் ஹுசைன் (ரலி), ஹஸ்ரத் அலி (ரலி) ஆகிய ஐவரைக் கண்டேன். அப்போது ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள், என்னிடம் மிகுந்த அன்புடனும், தாய்ப்பாசத்துடனும் இந்த அடியேனின் தலையைத் தங்களின் மடியில் வைத்துக்கொண்டார்கள்.

இந்தக் கஷ்ப் காட்சியைக் கண்ட நாளிலிருந்து, ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுடன் எனக்கு,வமிசாவழித் தொடர்பு இருக்கிறது என்ற உறுதி ஏற்ப்பட்டது. இறைவனுக்கே எல்லாப் புகழும்!

எனவே என்னுடைய தாய் வழி மூதாதையர்கள் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களின் வழித் தோன்றல்களாவார்கள். என்னுடைய தந்தை வழி மூதாதையர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு சஹாபியாகிய ஹஸ்ரத் ஸல்மானுல் ஃபாரிஸீ (ரலி) அவர்களின் வழித் தோன்றல்களாவார்கள்.என்னுடைய இந்த வமிசாவளிப் பரம்பரை,மக்களால் மட்டும் பதிவுசெய்யப்பட்டதன்று,இறைவனும் எனக்கு அறிவித்த இறையறிவிப்புகளில் மிகத் தெளிவாகவே அறிவித்துள்ளான். (1.நுஸூலுல் மஸீஹ், பக்கம் 50:2துஹ்பே கோல்டுவிய்யா, பக்கம் 31)