அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

"இறுதி நபித்துவ பேரவை"யின் சூழ்ச்சியும் இயக்கத்தின் எழுச்சியும்


அஹ்மதியா இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள முல்லாக்கள் அங்குள்ள பாமர மக்களைத் தூண்டி வன்முறையிலும் காட்டுமிராண்டித்தனத்திலும் அவர்களை ஈடிபடுத்தி வருவதைப் போன்று இங்கும் குழப்பத்தை ஏற்படுத்த சில முல்லாக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர். 'தஹப்புஸே கதமுன் நுபுவத்'.இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை இவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்தி அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக சில அபத்தமான தீர்மானங்களை வெளியிட்டிருப்பதும் பாகிஸ்தான் பயங்கரவாத முல்லாக்களை இவர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் இந்த 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' முதன் முதலில் உருவாக்கி செயல்பட்டு வருவது பாகிஸ்தானிலேயேயாகும்.


இவர்களின் அமைப்பிற்கு இவர்கள் சூட்டியுள்ள 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' என்ற பெயரே வேடிக்கையானது. இறுதி நபித்துவத்தை இவர்கள் பாதுகாக்கிறார்களாம்! நபித்துவம், கிலாபத் ஆகியன கிடைப்பதற்க்கரிய இறையருட்கலாகும். இஸ்லாமிய சமுதாயத்திற்கு இந்த அருட்கள் கிடைக்கும் என்பது இறைவன் அளித்துள்ள வாக்குறுதி!இந்த அருட்கள் கிடைக்கப் பெற்றால் அவையே பேணிப் பாதுகாக்கப் பட வேண்டியவையாகும். நபித்துவமோ, கிலாபத்தோ இனி ஏற்படாது என்று கூறும் இவர்கள் எதனைப் பாதுகாக்க விழைகிறார்கள் என்று நமக்கு புரியவில்லை! போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போன்றிருக்கிறது இது!

இவர்களின் உண்மையான நோக்கம் பாதுகாப்பது அன்று, அழிப்பது! வீண் குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கும் நற்பெயரை அழிப்பதுதான் இவர்களின் நோக்கமென்பது இவர்களின் நடவடிக்கைகளிலிருந்து புலனாகிறது.

ஆனால் அஹ்மதியா இயக்கத்தை இது போன்று எதிர்த்தவர்கள் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்தார்கள் என்பதும் அந்தத் தோல்வியை அவர்களே ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதும் வரலாறு ஆகும்.

அஹ்மதியா இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்தில் கடுமையாக எதிர்த்திருந்தது அஹ்ராரி ஜமாஅத் ஆகும். அந்த அஹ்ராரி இயக்கத்தின் தோல்வி பற்றி அதன் தலைவரான அதாவுல்லா கூறி இருப்பதைப் பாருங்கள்.

"நிச்சயமாக அஹ்ராரி ஜமாஅத் ஒரு பாக்கியம் கெட்ட ஜமாத்தாக இருக்கிறது. எல்லா செயலரன்குகளிலும் இதற்க்கு தோல்வி மேல் தோல்விதான் கிடைத்துக் கொண்டிருக்கிறது". ("தாரிக்கே அஹ்றார்" பக்கம் 152)

1954- இல் பாகிஸ்தானில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' என்ற அமைப்பே இதனை செய்தது. இதனை தலைமை தாங்கி நடத்தியவர் பாகிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமி நிறுவனர் அபுல் அஹ்லா மௌதூதி ஆவார். ஆனால் இவர்களின் காட்டுமிராண்டித்தனம் ஐயூப்கானின் "மார்ஷல் லா" வால் ஒடுக்கப்பட்டது. மௌதூதி சாஹிபிற்க்கும் மௌலவி நியாசியிக்கும் பதினான்காண்டு கடுங்காவல் சிறை தண்டனை கிடைத்தது.

இவர்களின் படு தோல்வி பற்றி இவர்களின் ஏடான தர்ஜுமாநுல் குர்ஆனில் மௌதூதி சாஹிப் குறிப்பிடுவதைப் பாருங்கள் :-

"மிர்ஸா குலாம் அஹ்மதின் இயக்கத்திற்கு இவ்வளவு மாபெரும் வெற்றிகள் ஏன் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து நான் சிந்தனை செய்வதுண்டு மிர்ஸா சாஹிபின் எதிரிகளுக்கு தோல்விக்கு மேல் தோல்வி கிடைத்து வருவதையும் காண முடிகிறது.

இப்படி ஏன் நடைபெறுகிறது? ஒருவர் அல்லாஹ்வுக்கும் நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்கும் எதிராக நின்று கொண்டு (?) நீங்கள் எல்லோரும் ஒன்றுதிரன்டாலும் எனது இயக்கத்தை தோல்வியடையச் செய்ய இயலாது என்று சவால் விடுகின்றார். தனக்கு கிடைத்து வரும் இறையுதவிகளும் தனது எதிரிகள் பெற்றுவரும் தோல்விகளும் தனது உண்மைதன்மைக்கு ஆதாரம் என்று இவர் கூறுகிறார். அவ்வாறே நடைபெற்று வருவதையும் நாம் காண்கிறோம்.

காதியானிகளுடைய பாதுகாப்பிற்கு மறைமுகமான ஏற்பாடுகள் உள்ளன. இதற்க்கு ஓர் எடுத்துக்காட்டு கூற வேண்டுமாயின் "மார்ஷல் ல"வைக் கூறலாம். எவ்வளவு சக்தியுடன் 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' துவங்கப்பட்டது. அது எப்படி முடிவடைந்தது என்பதைப் பாருங்கள். (தர்ஜுமானுள் குர் ஆன், ஆகஸ்ட்1954)

கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் அஹ்மதியா இயக்கம் வளர்ந்தோங்கி வந்திருக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் மௌதூதி சாஹிப் அதற்க்கான உண்மையான காரணத்தை உணராதது பரிதாபத்திற்குரியது. ஆனாலும். இங்குள்ள 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' காரர்களும் ஜமாத்தில் உலமாவின் அங்கங்களும் இதனைச் சிந்திக்க வேண்டியவர்களாவார்கள்.

1954-இல் அஹ்மதியா இயக்கத்திற்கு பாதுகாப்பளித்தது அதன் வளர்ச்சிக்கு வழி கோலியது ஐயூப் கானின் 'மார்ஷல் லா' என்றால் அதற்க்கு முன் தனிமனிதராய் நின்றிருந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பாதுகாப்பும் அவர்கள் தோற்றுவித்த இயக்கத்திற்கு வளர்ச்சியும் தந்தது எது? முழுக்க முழுக்க மௌதூதி இயக்கத்தின் ஆதரவாளரான ஜெனரல் ஜியா, பாகிஸ்தானை ஆளுகின்ற நேரத்தில், அவருடைய அதிகார பலமும், அடக்குமுறைகளும் மேலோங்கி இருந்த நேரத்தில் அஹ்மதியா இயக்கத்திற்கு பாதுகாப்பும், அதன் வளர்ச்சிக்கு உதவியும் தந்த அந்த சக்தி எது? நிச்சயமாக அது எல்லாம் வல்ல இறைவனேயாகும். இதனை இந்த உலமாக்கள் உணராவிட்டாலும் அஹ்மதியா இயக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் நிச்சயமாக உணர்வார்கள்.