நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறு.
'லா' என்ற சொல் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களில் அந்தச் சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
'லா ஹிஜ்ரத பஃதல் ஃபத்ஹி - வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை
'லா தீன லிமன் லா அமானத லஹூ'. - அமானத் இல்லாதவர்க்கு மார்க்கமில்லை
'லா ஸைஃப இல்லா துல்ஃபிகார்' - துல்ஃபிகார் தவிர வேறு வாளில்லை
'லா பஃத இல்லா அலீ - அலி இன்றி வேறு இளைஞர் இல்லை.
'அலி இன்றி வேறு இளைஞர் இல்லை' என்பதன் பொருள் அலியைப் போல் இளமையில் எல்லாக் குணங்களும் பொருந்திய வேறு இளைஞரில்லை என்பதே அன்றி, உலகில் அவரையன்றி எந்த ஒரு இளைஞரும் இல்லை என்பது அதன் பொருளன்று.
அதுபோல 'துல்ஃபிகாரைத் தவிர வேறு வாளில்லை' என்பதன் பொருள் அது போன்ற ஒரு வாளில்லை என்பதல்லாது, வேறு வாளே இல்லை என்பதன்று.
அது போல 'அமானத் இல்லாதவனுக்கு மார்க்கமில்லை' என்பதன் பொருள் அவன் எந்த ஒரு மார்க்கத்தையும் சேர்ந்தவனல்ல என்பதன்று. மாறாக, அவன் மார்க்கத்தை முழுமையாகப் பேணவில்லை என்பதே அதன் பொருள்.
அது போல் 'வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை' என்பதன் பொருள் மக்கா வெற்றிக்குப் முன் நிகழ்ந்ததுபோல மகத்துவமிக்க சிறப்பான ஹிஜ்ரத் இனி ஏற்ப்படாது. அல்லது இனி மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டிய நிலை ஏற்ப்படாது என்பதே தவிர, இனி ஒருபோதும் எத்தகைய ஹிஜ்ரத்தும் இல்லை என்பதன்று.
இவற்றிலிருந்து மேற்ப்படி ஹதீஸ்களில் வந்துள்ள 'லா' என்ற சொல், ஒன்றன் தனிப்பட்ட குணத்தை மட்டும் 'அது கிடையாது' எனக் குறிப்பதற்கு பயன்பட்டுள்ளதே தவிர, முழுமையாக அறவே கிடையாது என்று கூறுவதற்கு அல்ல என்பது புலப்படுகின்றது. இது போல் தான், 'லா' என்ற சொல் மேற்குறிப்பிட்ட 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
இதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈரான். ரோமானியப் பேரரசர்களைக் குறித்து கீழ் வருமாறு கூறியதாக ஒரு ஹதீஸ் காணப்படுகிறது.
'இதா ஹலக கிஸ்ரா ஃபலா கிஸ்ரா பஃதஹு, வ இத ஹலக கைஸரு ஃபலா கைஸர பஃதஹு' - கிஸ்ரா இறந்தால் அவருக்குப் பிறகு கிஸ்ரா இல்லை கைஸர் இறந்தால் அவருக்குப் பிறகு கைஸர் இல்லை (புகாரி)
இதன் பொருள் அன்றுள்ள கிஸ்ரா, கைஸர் பேரரசர்களைப் போன்ற பலசாலிகள், திறமைசாலிகள் இனி தோன்ற மாட்டார்கள் என்பதன்றி வேறில்லை.
ஸஹீஹ் புகாரியின் விளக்கவுரையாகிய 'ஃபத்ஹுல் பாரி' யில் அல்லாமா அஸ்கலானி அவர்கள் மேற்படி ஹதீஸைப் பற்றி கீழ் வருமாறு கூறியுள்ளார்கள்.
'அவருக்குப் பிறகு கைஸரில்லை' என்று கூறியதன் பொருள், அவரைப் போல் ஆட்சி செய்யக் கூடிய கைஸர் தோன்ற மாட்டார் என்பதாக கத்தாபி கூறியுள்ளார்கள்.' மேலும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளதாவது:
'அவர்கள் இவருக்குப் பிறகு வேறு கிஸ்ராவும் கைசரும் வந்தார்களல்லவா என்று நீங்கள் கேட்பீர்களானால், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப் போன்று செல்வாக்கு உடையவர்களில்லை என்று நான் கூறுகிறான்.'
இவற்றைப் போன்று 'லா நபிய்ய பஃதீ' எனக்குப் பிறகு நபியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள், அவர்களைப் போன்ற சிறப்பு மிக்க ஷரியத்துடைய நபி தோன்ற மாட்டார்கள் என்பதே அன்றி வேறில்லை.
இனி பஃதீ என்ற சொல் எந்தெந்த இடத்தில் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் பார்ப்போம். பஃதி என்ற சொல் பல பொருள்களில் அரபு மொழியில் கையாளப்படுகிறது. அச்சொல் 'பிறகு' என்ற பொருளில் மட்டுமின்றி 'உடன்', 'பகரமாக', 'எதிராக', 'போன்ற', என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'அக்ரபுல் மவாரிது', 'தாஜுல் உரூஸ்' என்ற அகராதிகளில் கீழ்வருமாறு பொருள் கூறப்பட்டுள்ளது:
'பஃது' என்பது 'கப்லு' என்பதன் எதிச்சொல்லாகும். சில சமயங்களில் அது 'மஅ' (உடன்) என்ற அர்த்தத்திலும் வரும்.
'மீஸானுல் அரப்' என்ற அகராதி நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
'பஃத' என்ற சொல் 'உடன்' என்ற அர்த்தத்திலும் வரும். உதாரணமாக
'ஃமனிஃததா பஃததாலிக' என்பதில் வந்துள்ள 'பஃது'க்கு 'உடன்' என்றே பொருள்,
'மிஸ்பாஹ்' என்ற அகராதியில்
'உதுல்லின் பஃத தாலிகஸனீம்' என்பதில் வந்துள்ள 'பஃத என்ற சொல்லிற்கு 'உடன்' என்றே பொருள்.