இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது.
இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி பெற்றிருக்கமாட்டேன். என் போன்ற ஓர் ஏழை மனிதனின் மூலமாக, அவனுடைய மார்க்கத்தின் கண்ணியம் வெளிப்பட வேண்டுமென
இறைவன் விரும்பியது, அவனுடைய பெரருளேயாகும். எதிரிகள் இஸ்லாத்தின் மீது எழுப்பிய ஆட்சேபனைகளையும், தாக்குதல்களையும் ஒரு முறை நான் எண்ணினேன். அவற்றின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் குறையாமல் இருப்பதைக் கண்டேன். அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென நான் நினைக்கின்றேன். மூவாயிரம் ஆட்சேபனைகள் எழுப்பப்படும் அளவுக்கு இஸ்லாம் அவ்வளவு பலகீனமான அடிப்படைகளைக் கொண்டதென யாரும் எண்ணிவிடவேண்டாம் இல்லை; ஒருக்காலும் அவ்வாறில்லை. கோணலான நோக்கமுடையவர்களின் அறியாமையின் விளைவே இந்த ஆட்சேபனைகள். பார்வை இல்லாத காரணத்தால், ஆட்சேபனைகளை எழுப்புகின்றவர்களுக்கு அவை தென்படுவதில்லை. உண்மையில், ஆட்சேபனை செய்கின்ற இப்பார்வையற்றோர் தடுமாறுகின்ற இடத்திலேயே உண்மையான கருவூலம் வைக்கப்பட்டுள்ளது. இது இறை ஞான தத்துவமேயாகும். மறைந்திருக்கும் இக்கருவூலத்தை உலகில் வெளிப்படுத்தவும் தூய்மையற்ற ஆட்சேபனைகள் என்னும் சக்தியை, அவ்வோளிவீசும் அணிகலன்களிலிருந்து துடைத்துத் தூய்மைப்படுத்தவும் இறைவன் என்னை அனுப்பியுள்ளான். எல்லா வகையான தீய எதிரிகளின் ஆட்சேபனைகளிலிருந்தும் திருக்குரானின் கண்ணியத்தை தூயதாக்க, இறைவனின் ஆவேசம் இப்பொழுது கொதித்தெழுந்துள்ளது. (மல்பூசாத் வால்யூம் 1 பக்கம் 57)