திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.
நம் விளக்கம்:
திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை – வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,